Saturday, 17 December 2016

மோடி அரசுக்கு 9 கேள்விகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...

1.     நவம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆர்பிஐ சட்டம், 1954-ன் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகள் மற்றும் சட்டப்பிரிவு 26(2)-ன் அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்டதா?
2.     அரசியல் சட்டப்பிரிவு 300-ன் படி, சொத்துரிமையை மீறுகிறதா?
3.     அரசியல் சட்டம் பிரிவு 14 மற்றும் 19-ன் அதிகார வரம்புகளுக்கு மாறாக, இந்த அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளதா?
4.     ஒருவர் தனது சொந்தப் பணத்தை எடுப்பதற்கு வரம்பு நிர்ணயிப்பது அரசியல் சட்டப்பிரிவுகள் 14, 19, 20 மற்றும் 21 ஆகியவற்றை மீறுகிறதா?
5.     ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்பை அமல்படுத்துவதன் மூலம் நாட்டின் சட்டம் செயல்முறை ரீதியாகவும் அடிப்படை உரிமைகள் ரீதியாகவும் மீறப்படுகிறதா?
6.     ஆர்பிஐ சட்டத்தின் பிரிவு 26 (2) கூடுதலான சட்ட அதிகாரங்களை வழங்குகிறதா?
7.     அரசின் நிதிசார் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக, நீதிமன்றம் சார்ந்த சீராய்விற்கான சாத்தியங்கள், வாய்ப்புகள் இருக்கிறதா?
8.     அரசியல் சட்டப்பிரிவு 32-ன் படி அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா?
9.     டெபாசிட்டுகள் மற்றும் பணம் எடுப்பதற்கு மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை பாரபட்சமானதா?

No comments: