Tuesday, 20 December 2016

கருண் நாயர் முதல் சதமே முச்சதம் . . .

750 ரன்கள் குவித்து இந்திய அணி சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கருண் நாயர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் கருண் நாயர் 71 ரன்களிலும், முரளி விஜய் 17ரன்களிலும் களத்தில் இருந்தனர். இருவரும் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 298 ரன்கள் எடுத்திருந்த போது பவுண்டரி அடித்து முச்சதத்தை கடந்தார்.
29 ரன் எடுத்திருந்த போது முரளி விஜய் அவுட்டானார். இந்த போட்டியில் அறிமுகமான 26 வயதாகும் இங்கிலாந்தின் டேவ்சன் இவரின் விக்கெட்டை எடுத்தார். கருண் நாயருடன் இணைந்து அசத்திய அஸ்வின் அரை சதம் அடித்தார்.
இங்கிலாந்து தொடரில் அறிமுகமான இந்திய அணி வீரர் கருண் நாயர் மொகாலி, மும்பையில் நடந்த போட்டிகளில் சோபிக்கவில்லை என்றாலும் சேப்பாக்கத்தில் 300 ரன்களை குவித்து முத்திரை பதித்தார்.26 வயதாகும் கருண் நாயர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தவர். கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வரும் இவர், உள்ளூர் போட்டிகளில் 39 ஆட்டங்களில் 2,862 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 328 ரன்களை குவித்துள்ளார். இதுவரைக்கும் 8 சதமும் 13 அரை சதமும்அடித்துள்ளார்.இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிராக மும்பையில் 726 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். கொழும்பில் நடந்த போட்டியில் 707 ரன்களும், ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் 704 ரன்களும் இந்திய அணி எடுத்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி குவித்த அதிகபட்ச ரன் 759 ஆகும். இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 5 ஓவரில் விக்கெட்இழப்பின்றி 12 ரன் எடுத்திருந்தது.நமது இதய பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

No comments: