Monday, 16 January 2017

‘டிஜிட்டல் இந்தியா’ வின் மறுபக்கம் 402 காவல்நிலையங்களில் தொலைபேசி இல்லை...

நாட்டில் சட்டம்- ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்ளும் காவல்துறையின்நிலை குறித்துவெளியான அறிக்கை அனைத்துதரப்பினருக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்கி யுள்ளது.இந்தியாவில், காவல்துறை அந்தந்த மாநில அரசுகளின் வசம் உள்ளது. காவல் துறையினை நவீனப்படுத்துவதற்காக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தா லும், மத்திய உள்துறை அமைச்சகமும் பல கோடி ரூபாயை நிதியாக வழங்கி வருகிறது. இந்நிலையில், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இந்தியாவில் மொத்தம் 15,555 காவல் நிலையங்கள் உள்ளதாகவும் அதில், 188 காவல் நிலையங்களில் வாகனங்கள் இல்லை, 402 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை, 134 காவல் நிலையங்களில் ஒயர்லெஸ் வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2016 வரை நாடு முழுவதும் காவல் துறையில் மொத்தம் 22,80,691 பேர் பணியில் உள்ளனர். அவர்களில் 5,56,539 பேர் மட்டுமே காவலர் குடியிருப்புகளை பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக 729 பொதுமக்களுக்கு ஒரு காவலர் என்ற விகிதாச்சாரத்தில் தற்போதைய நிலை உள்ளதாகவும், அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒருவரே பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments: