Thursday, 26 January 2017

ஜனவரி - 26, அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்...

விழிப்போடிருப்போம்...
குடியரசு என்றால் குடிமக்களின் அரசு அதாவது மக்களாட்சி என்று பொருள். அந்தமகத்தான மக்களாட்சியின் மகத்துவம் கொஞ்சம்கொஞ்சமாக சிதைக்கப்பட்டு, சர்வாதிகாரமாக மாறுகிறதோ என்ற ஐயந்தான் இன்று எழுகிறது. டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றுநடைமுறைக்கு வந்தது. அன்றைய நாளையே இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளையே தகர்க்கும் வேலை இன்று பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மத்தியில்பாஜக தலைமையிலான ஆட்சியில் மோடிபிரதமராக பதவியேற்றதில் இருந்து அதன் வேகம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.கடந்த குடியரசு தினத்தின் போது, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில் இந்திய அரசியல் சாசன முகவுரையில் இடம்பெற்றிருந்த மதச்சார்பற்ற மற்றும் சோசலிச என்ற சொற்கள் அதில் இருந்து நீக்கப்பட்டன. அதன் உண்மையான நோக்கம் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கக்கூடாது, சோசலிசமும் கூடாது. மாறாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியா, ஒரே கலாச்சாரம், ஒரேபண்பாடு, அதுவும் இந்துத்துவா எனும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே. மறைமுகமாக பாஜக அரசு ஒவ்வொரு கட்டமாக தனது திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.அதில் ஒன்றுதான் தமிழகத்தின் பண்பாட்டுஉரிமையான ஜல்லிக்கட்டினை தடுத்த முயற்சி.அதே போல் கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம்பண்டிகையில் அமித்ஷா மூக்கை நுழைத்ததுஎன்று பட்டியல் நீள்கிறது. இந்திய அரசியல்சாசனத்தில் குறிப்பிட்டிருக்கும் மிக முக்கியமானஅம்சங்களில் ஒன்று, ஒரு சிலரின் கைகளிலேயே நாட்டின் செல்வவளம் குவியா வண்ணம்தடுக்க வேண்டும் என்பது. அது அரசின் கடமைஎன குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நாட்டில்என்ன நடக்கிறது? இந்தியாவின் பெரும்பான்மைவளங்கள் எல்லாம் அதானி, அம்பானி உள்ளிட்டஒருசிலரின் கைகளில் குவிக்கும்வேலையைஅரசேமுன்நின்று செய்கிறது என்பதுதான் கொடுமை. அதே போல் கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில், சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகள் என்று ஒவ்வொன்றாக பறிக்கமுயல்கிறது. குறிப்பாக மத்திய அரசு வெளியிட்டதேசிய நீர் கொள்கை வரைவு திட்டம்.
அதன் படி மாநில அரசின் கைகளில் இருந்து அதனைபறித்து தனியார் கையில் கொடுப்பது அதனைகட்டுப்படுத்தும் அனைத்து அதிகாரங்களையும்மைய அரசே வைத்து கொள்வது என்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதே போல்மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை,அகிலஇந்திய மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதிக்கான நுழைவுத்தேர்வு (நீட்) ஆகியவை, மாநிலத்தின் தனித்துவமான சமூகநீதி கோட்பாட்டுக்குவேட்டு வைப்பதாக இருக்கிறது. மேலும் மாநில வருவாயை பறிக்கும் வகையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு சட்டதிட்டங்கள் மூலம் கூட்டாட்சி தத்துவத்தையே சீர்குலைத்து வருகிறது. அதே போல் ஆன்மிகம் என்ற பெயரில்இந்துமத வெறியை புகுத்துகிறது.பொருளாதாரம்,அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்குவிதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்குஅடங்கி நடப்பது,மனிதனுக்கும் இறைவனுக்கும்செய்யும் துரோகம் என்று சுதந்திரத்திற்கு முன்பு1930ல் மகாத்மாகாந்தி கூறினார். எனவே நாட்டுமக்கள் விழிப்போடிருந்து குடியரசைக் காக்க வேண்டும்....தீக்கதிர்.

No comments: