Thursday, 26 January 2017

நமது பாராட்டுக்கள் . . .

ஜனவரி - 26, அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்...

விழிப்போடிருப்போம்...
குடியரசு என்றால் குடிமக்களின் அரசு அதாவது மக்களாட்சி என்று பொருள். அந்தமகத்தான மக்களாட்சியின் மகத்துவம் கொஞ்சம்கொஞ்சமாக சிதைக்கப்பட்டு, சர்வாதிகாரமாக மாறுகிறதோ என்ற ஐயந்தான் இன்று எழுகிறது. டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றுநடைமுறைக்கு வந்தது. அன்றைய நாளையே இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளையே தகர்க்கும் வேலை இன்று பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மத்தியில்பாஜக தலைமையிலான ஆட்சியில் மோடிபிரதமராக பதவியேற்றதில் இருந்து அதன் வேகம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.கடந்த குடியரசு தினத்தின் போது, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில் இந்திய அரசியல் சாசன முகவுரையில் இடம்பெற்றிருந்த மதச்சார்பற்ற மற்றும் சோசலிச என்ற சொற்கள் அதில் இருந்து நீக்கப்பட்டன. அதன் உண்மையான நோக்கம் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கக்கூடாது, சோசலிசமும் கூடாது. மாறாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியா, ஒரே கலாச்சாரம், ஒரேபண்பாடு, அதுவும் இந்துத்துவா எனும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே. மறைமுகமாக பாஜக அரசு ஒவ்வொரு கட்டமாக தனது திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.அதில் ஒன்றுதான் தமிழகத்தின் பண்பாட்டுஉரிமையான ஜல்லிக்கட்டினை தடுத்த முயற்சி.அதே போல் கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம்பண்டிகையில் அமித்ஷா மூக்கை நுழைத்ததுஎன்று பட்டியல் நீள்கிறது. இந்திய அரசியல்சாசனத்தில் குறிப்பிட்டிருக்கும் மிக முக்கியமானஅம்சங்களில் ஒன்று, ஒரு சிலரின் கைகளிலேயே நாட்டின் செல்வவளம் குவியா வண்ணம்தடுக்க வேண்டும் என்பது. அது அரசின் கடமைஎன குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நாட்டில்என்ன நடக்கிறது? இந்தியாவின் பெரும்பான்மைவளங்கள் எல்லாம் அதானி, அம்பானி உள்ளிட்டஒருசிலரின் கைகளில் குவிக்கும்வேலையைஅரசேமுன்நின்று செய்கிறது என்பதுதான் கொடுமை. அதே போல் கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில், சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகள் என்று ஒவ்வொன்றாக பறிக்கமுயல்கிறது. குறிப்பாக மத்திய அரசு வெளியிட்டதேசிய நீர் கொள்கை வரைவு திட்டம்.
அதன் படி மாநில அரசின் கைகளில் இருந்து அதனைபறித்து தனியார் கையில் கொடுப்பது அதனைகட்டுப்படுத்தும் அனைத்து அதிகாரங்களையும்மைய அரசே வைத்து கொள்வது என்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதே போல்மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை,அகிலஇந்திய மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதிக்கான நுழைவுத்தேர்வு (நீட்) ஆகியவை, மாநிலத்தின் தனித்துவமான சமூகநீதி கோட்பாட்டுக்குவேட்டு வைப்பதாக இருக்கிறது. மேலும் மாநில வருவாயை பறிக்கும் வகையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு சட்டதிட்டங்கள் மூலம் கூட்டாட்சி தத்துவத்தையே சீர்குலைத்து வருகிறது. அதே போல் ஆன்மிகம் என்ற பெயரில்இந்துமத வெறியை புகுத்துகிறது.பொருளாதாரம்,அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்குவிதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்குஅடங்கி நடப்பது,மனிதனுக்கும் இறைவனுக்கும்செய்யும் துரோகம் என்று சுதந்திரத்திற்கு முன்பு1930ல் மகாத்மாகாந்தி கூறினார். எனவே நாட்டுமக்கள் விழிப்போடிருந்து குடியரசைக் காக்க வேண்டும்....தீக்கதிர்.

Sunday, 22 January 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச கூலி உயர்வு...

19/01/2017 முதல் ஒப்பந்த ஊழியர்களது 
குறைந்த பட்சக்கூலி உயர்ந்துள்ளது.
இதற்கான இறுதி அரசிதழை மத்திய அரசு 19/01/2017 அன்று வெளியிட்டுள்ளது.

UN SKILLED LABOUR 

A   பிரிவு  நகரம்  ரூ.523/-
B   பிரிவு  நகரம்  ரூ.437/-
                               C   பிரிவு  நகரம்  ரூ.350/-

Friday, 20 January 2017

போராட்டம் வெல்லட்டும் - உளமார வாழ்த்துகிறோம்...

 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்படுத்திய எழுச்சியை மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவு படுத்துகிறது. ஒரே வேறுபாடு. அன்று அரசின் அடக்குமுறை, எதிர் வன்முறை எல்லாம் இருந்தன. இன்றோ இப்படி ஒரு கட்டுப்பாட்டை யாரும் எதிர்பார்க்கவில்லை. காந்தியவழி அகிம்சைப் போராட்டத்தை எப்போதும் அரசு பார்த்துக் கொண்டு இருக்காது. பெரும் அரசியல் நெருக்கடி ஏற்படும் என பயந்து ஆதரவு வேஷம் போடுகிறது. இளைய தலைமுறை அநீதி கண்டு ஆர்ப்பரிக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்து விட்டது. சமூகப்பிரக்ஞை இல்லாதவர்கள் மாணவர்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யாகி விட்டது. ஊழலுக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அவர்கள் தோள்கள்மீது சுமத்தப்பட்டிருப்பதை உணரும் காலம் வந்து விட்டது.

Wednesday, 18 January 2017

பண மதிப்பு இழப்பு- எதிராக ஜன- 31ல் மனிதச் சங்கிலி ...

பணத்தட்டுப்பாடு எதிர்ப்பு நடவடிக்கைக்குழுவின் அமைப்புக்கூட்டம் சென்னையில் ஜன.13 அன்று க.சாமிநாதன் (AIIEA) தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.சவுந்தரராசன், ஜி.சுகுமாறன் (CITU), எம்.துரைபாண்டியன் (மத்திய அரசு ஊழியர்),சி.பி.கிருஷ்ணன் (வங்கி),தி.கலைசெல்வி (மாநிலஅரசு ஊழியர்), டி.செந்தில்குமார்(காப்பீடு), எஸ்.பக்தவச்சலம் (ஆசிரியர்), ஆர்.சேகரன் (வங்கி அதிகாரிகள்),  எஸ்.செல்லப்பா, கே.சீனிவாசன்( BSNLEU,ஆர்.ஜோதி (அனைத்துத்துறை ஓய்வூதியதாரர்கள்), பாலா (வாலிபர் சங்கம்), உச்சிமாகாளி (மாணவர் சங்கம்), பிரமிளா (மாதர்சங்கம்), நம்புராஜன் (மாற்றுதிறனாளி), பெ.சண்முகம் (விவசாயிகள் சங்கம்), வீ.அமிர்தலிங்கம் (விவசாயி தொழிலாளர் சங்கம்) உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:இந்தியா முழுமையுமுள்ள உழைப்பாளி மக்களின் வாழ்நிலையில் கடும் பாதிப்புகளை உருவாக்கியுள்ள “ செல்லாப்பண நடவடிக்கை” யால்ஏற்பட்டுள்ள எதிர்வினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைப்புகள் தங்களின் சுயேச்சையான இயக்கங்களை நடத்தியிருக்கின்றன. சென்னையிலும், மதுரையிலும் வாலிபர்,மாணவர், மாதர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டதையும், சிறையிலடைத்ததையும் மீறி முன்னணி ஊழியர்கள் உறுதியோடு களத்தில் நின்றிருப்பது பாராட்டுதலுக்குரியதாகும். மக்களின் நலனுக்கான போராட்டத்தை ஒடுக்க முனைந்த தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
செல்லாப்பண நடவடிக்கையின் நோக்கங்களாக மத்திய அரசுகறுப்புப்பண ஒழிப்பு, கள்ளப்பணஒழிப்பு, தீவிரவாத நடவடிக்கை களுக்கான ஊற்றுக்கண்ணை அடைப்பது, லஞ்ச-ஊழல் தடுப்பு ஆகியனவற்றை அறிவித்தது. ஆனால் கடந்த 65 நாட்களின் அனுபவம் இந்த இலக்குகளை நோக்கிய அறிகுறிகள் எதையும் உணர்த்தவில்லை என்பதேஉண்மை. அரசின் அறிவிக்கப்பட்ட இலக்குகள் ஈடேறவில்லையென்பதோடு இந்நடவடிக்கை இந்திய மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக சீரழித்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு பற்றிய பல மதிப்பீடுகளில் ஒன்று 3 சதவீதத்திற்கும் மேலான சரிவைக் கணித்துள்ளது. சிறு தொழில்கள், சிறு வியாபாரங்கள் பெரும் பாதிப்புக்களுக்கு ஆளாகியுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புகளுக்கு ஆளாவார்கள் என கணிப்புகள் கூறுகின்றன.
கிராமப்புறங்களில் 100நாள் வேலைத்திட்டம் ஸ்தம்பித்துநிற்கிறது. ஏடிஎம்கள் செயலிழந்தும், வங்கிகளின் வாசல்களில் பெரும் கூட்டங்களும் காணப்படுகின்றன. 115 உயிர்கள்பறிபோயிருக்கின்றன. மிகுந்த இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் சேவை ஆற்றி வருகிற வங்கி அதிகாரிகள்- ஊழியர்கள், உயிரிழப்புகளும் இதில் அடக்கம். ‘கறுப்புப்பண ஒழிப்பிலிருந்து’ தனது இலக்கை ‘காசற்ற பொருளாதாரத்திற்கு “ அரசு மாற்றியிருப்பது மக்களின் கவனத்தை திசை திருப்புகிற உத்தி மட்டுமல்ல. பன்னாட்டு நிதி தொழில் நுட்ப நிறுவனங்களின் சந்தை வேட்டைக்கு வழிவகுப்பதாகும்.அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ள பணத்தட்டுப்பாடு நடவடிக்கைக்கு எதிராக சிஐடியு, மத்திய-மாநில அரசு ஊழியர் ,ஆசிரியர் , வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர், மாதர், வாலிபர், மாணவர், வழக்கறிஞர், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பணத்தட்டுப்பாடு எதிர்ப்பு நடவடிக்கைக்குழு சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.ஜனவரி 31 அன்று மாலையில் மாவட்டத் தலைநகரங்களில் மாவட்டம் முழுமையுமான திரட்டலோடு “ மனிதச் சங்கிலி” நடத்துவது -மனிதச் சங்கிலியில் வணிகர் அமைப்புகள், குடியிருப்பு நல சங்கங்கள் போன்றஅமைப்புகளுக்கு அழைப்புவிடுப்பது என்று திட்டமிடப்பட்டது.இந்த தகவலை கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கூறியுள்ளார் ...
கோரிக்கைகள்
1.மக்கள் சொந்தப்பணத்தை எடுக்க எந்த கட்டுப்பாடுகளும் கூடாது
2.காசற்ற பொருளாதாரத்தில் மக்களை கட்டாயப்படுத்தி தள்ளாதே
3.கறுப்புப்பணத்தை கைப்பற்ற உறுதியான நடவடிக்கை எடுத்தல்
4.விவசாய வேலைகள் முடங்கியிருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயக்கடன்கள் ரத்து
5.கிராமப்புற 100 வேலைத் திட்ட ஒதுக்கீட்டை இரண்டு மடங்கு ஆக்கு
6.செல்லாப்பண நடவடிக்கையால் உயிரிழந்துள்ள மக்களுக்கு இழப்பீடு
7.பாதிக்கப்பட்டுள்ள சிறு நடுத்தர தொழில்களுக்கு வரிச்சலுகை
8.கூட்டுறவு வங்கிகள் மீதான அதீதக்கட்டுப்பாடுகளில் தளர்வு
9.மாநில அரசுகளுக்கு ஆகிற கூடுதல் செலவினத்தை ஈடுகட்டுதல்
10.வேலை இழந்தவர்களுக்கு இழப்பீடு
11.ஆதார் இணைப்பைக்கட்டாயமாக்கி ரேசன் அளிப்பை நிறுத்தாதே
இயக்கங்கள்
ஜனவரி 29, 30,31 ஆகிய மூன்று நாட்கள் பிரச்சார இயக்கம்
ஜனவரி 27 அன்று தொழிலகங்கள், அலுவலகங்கள் முன்பு வாயிற்கூட்டங்கள் நடத்துவது
காலை 9 TO 1 மணி வரை அனைத்து  இல்லம் தோறும் துண்டுப்பிரசுரங்களோடு மக்களை சந்திப்பது
மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை வேன் பிரச்சாரம் அல்லது ஆட்டோ மைக் பிரச்சாரம் ( தாலுகா மையங்களில் ஜனவரி 29,30) இதற்கான மாவட்ட அளவிலான தயாரிப்புக்கூட்டங்களை ஜனவரி 19க்குள் நடத்துவது,  தோழர்களே , அனைத்து சங்கங்களுடன் இணைந்து இவ்வியக்கத்தை நமது BSNLEU சங்கமும் பங்கேற்று வெற்றிகரமாக்கிட வேண்டுமாய் நமது மாநில சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது....