Thursday 30 June 2016

`மத்திய அரசு துரோகம்’ . . .

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநில பொதுச் செயலாளர் வே. துரை பாண்டியன் கூறியதாவது:7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. சம்பள கமிஷன்அறிக்கை கொடுக்கப்பட்ட வுடன், உயர்நிலை குழு பி.கே.சின்கா தலைமையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த பல மாதங்களாக சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எல்லாம் அதிகாரப்பூர்வமற்றது எனக் கூறுகிறார்கள். சம்பளக் கமிஷன் பரிந்துரையை அப்படியே அந்த உயர்நிலைக் குழு அமல்படுத்தி உள்ளது.1957ம் ஆண்டு 2வது சம்பளக் கமிஷ னிலேயே 14.2 சதவிகித ஊதிய உயர்வு பெற்றோம். தற்போது 7வது சம்பளக் கமிஷன் 14.3 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது. அப்போது இருந்த விலைவாசியும் தற்போது உள்ள விலைவாசியும் ஒன்றா? இப்போது பீன்ஸ் 180 ரூபாய் விற்கிறது.7வது சம்பளக் கமிஷன் சம்பளத்தை உயர்த்தி வழங்கும் அறிக்கையாக இல்லை. சம்பளத்தை பறிக்கும் அறிக்கையாக உள்ளது. உதாரணமாக ஆரம்பநிலை (எம்.டி.எஸ்.) ஊழியர் 15,750 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். இந்த 7வது சம்பளக் கமிஷன் மூலம் அவர் 18,000 ரூபாய் வாங்குவார். ஆனால் அவரிடமிருந்து ஓய்வூதிய திட்டத்திற்காக 1,800 ரூபாயும், காப்பீட்டுக்காக 3,300 ரூபாயும் பிடித்தம் செய்யப்படும். அவருக்கு ஊதிய உயர்வு 2,250 ரூபாய். ஆனால் பிடித்தம் செய்யப்போவதோ 3,300 ரூபாய். அப்படியென்றால் அவர் ஏற்கனவே வாங்கிய சம் பளத்தில் இருந்து கூடுதலாக 1,050 ரூபாய் பிடித்தம் செய்யப் படும்.மத்திய அரசு ஊழியர் களுக்காக ரூ.1.2 லட்சம் கோடி செலவு செய்ய வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். இவை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சம் முப்படை வீரர்கள், ஓய்வூதியதாரர்கள் 48 லட்சம் பேர் என அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதிலும் ரூ.60 ஆயிரம் கோடி எங்களிடமே வருமான வரி உள்ளிட்டவைகள் மூலம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் அரசு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.எனவே அரசு அறிவித்துள்ள 7வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம் ஏற்க வில்லை. எனவே வரும் ஜூலை 4ம் தேதிமுதல் 8ம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டங் கள் நடைபெறும். ஜூலை 11ம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளோம். இதில் ரயில்வே, தபால், பாதுகாப்புப் படை, வருமான வரி ஊழியர்கள் முழு அளவில் பங்கேற்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

BSNLEU மாவட்ட நிர்வாகி தோழர் S. பரிமள ரெங்கராஜ், பணி நிறைவு விழா ...

தோழர்களே ! நமது BSNLEU மாவட்ட சங்க  நிர்வாகி  அருமைத்தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்களுக்கு திண்டுக்கல் மனமகிழ் மன்றம் சார்பாக மிகவும் பிரம்மாண்டமான பணி நிறைவு விழா நடைபெற்றது  ... விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொன்டு சிறப்பித்தனர். தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்கள் இல்லத்தில் அற்புதமான அறுசுவை உணவு ஏற்பாடு செய்திருந்தார். தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்களுக்கு நமது BSNLEU சங்கம் சார்பாக எதிர்வரும் மாவட்ட மாநாட்டில், மாநிலச்   செயலர் வாழ்த்தோடு  ஒரு சிறப்பு மிக்க பணிநிறைவு பாராட்டு விழாவை மாவட்ட சங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 29-06-16 அன்று திண்டுக்கல் TRC சார்பாக நடைபெற்ற விழாவிலும் நாம் கலந்து கொன்டு பாராட்டினோம்.

28-06-16 சென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து.


 


மதுரை CSC-TKM கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்து ...

அருமைத் தோழர்களே ! 28-06-16 அன்று மாலை, கிளைத்தலைவர் தோழர். A. பாண்டியன் தலைமையில் CSC-TKM கிளையின் மாநாடு நடைபெற்றது. மாவட்ட சங்கம் சார்பாக தோழர்கள், செல்வின் சத்தியராஜ், சூரியன் இருவரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். கிளை மாநாட்டில் , இம்மாதம் பணிநிறைவு பெரும் தோழர்கள் சுப்ரமணியன் & ஜேவியர் ஆகிய இருவருக்கும் கிளையின் சார்பாக சிறந்த பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மதுரை N/S கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்து ...

அருமைத்ம தோழர்களே ! கடந்த 27-06-16 அன்று மதுரை  N/S கிளைமாநாடு கிளைத்தலைவர் ,தோழர்..A.முபாரக் , தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள், செல்வின் சத்தியராஜ், சூரியன் கலந்து கொண்டு உரையாற்றினர். தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள், மாயாண்டி, சிவராமன் , கோதண்டரமேஷ் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  புதியநிர்வாகிகள்  பணி சிறக்க நமது  வாழ்த்துக்கள்  ...

Wednesday 29 June 2016

30-06-16 பணி நிறைவு பாராட்டு . . .


FORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும் . . .

அருமைத் தோழர்களே ! நமது அகில இந்திய FORUM முடிவுகளையும், மற்றும் நமது மத்திய சங்க செய்திகளையும், நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

கார்ட்டூன் . . . கார்னர் . . .