BSNL. மொபைலில் இருந்து லேண்ட்-லைனுக்கு அழைப்பு மாறும்வசதி எவ்வித கட்டணமின்றி அறிமுகம் செய்துள்ளது.BSNL. வாடிக்கையாளர் களுக்கு அந்த நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது “ப்ரீ-டு-ஹோம்” என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர் தன்னுடைய அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் போது தம் வசதிக்கேற்ப மொபைல் தொலைபேசியில் வரும் அழைப்புகளை லேண்ட்- லைன் தொலைபேசியில் பெறலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை.BSNLசெல்போன் வாடிக்கையாளர்கள் கட்டிடங்களுக்குள்ளும் சிக்னல் குறைபாடின்றி மிக துல்லியமாக வாய்ஸ் அழைப்புகளை தங்களது லேண்ட்-லைனில் பெறமுடியும். நாள் முழுவதும்மொபைல் உபயோகத்தினால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.மொபைல் போனில் இருந்து லேண்ட்-லைன் தொலைபேசிக்கு அழைப்பு மாற்றம் செய்யும் இந்த வசதி SSA.க்குள் மற்றும் SSA.க்கு வெளியிலும் செய்ய முடியும். செல்போனில் இருந்து லேண்ட்-லைனுக்கு அழைப்பு மாற்றம் செய்யும் வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது.வாடிக்கையாளர்களின் 4 விருப்பங்களின் அடிப்படையில் அழைப்பை மாற்றம் செய்து கொள்ளலாம். எப்போதும் கால் மாற்றும் முறை, பிஸியாக இருக்கும் போது மட்டும் மாற்றும் முறை, செல்போன் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது கவரேஜ் ஏரியாவிற்கு வெளியில் இருந்தாலோ அல்லது அழைப்பை முற்றிலும் ஏற்காமல் இருந்தாலோ போன்ற விருப்பங்களில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.சிறந்த சேவையை BSNL. வாடிக்கையாளர் களுக்கு வழங்க நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம் என BSNL நிர்வாக குழுவின் இயக்குனர் ஆர்.கே. மிட்டல் தெரிவித்துள்ளார்.மேலும் ரம்ஜானை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு காம்போ வவுச்சர் STV. 786 ரூபாய் சிறப்பு சலுகையாக BSNLசெய்துள்ளது. இந்த வவுச்சரை பயன்படுத்தி 600 ரூபாய் வரை பேசலாம். 786 MB. டேட்டா மற்றும் 786 குறுச்செய்தியை (SMS) இலவசமாக பெறலாம். இந்த வவுச்சரின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள். இந்த சலுகை ஜூலை 6ம் தேதி வரை பெறலாம்.மேலும் விவரங்களுக்கு WWW.bsnl.co.in அல்லது WWW.tamilnadubsnl.co.in இணைய தளம் அல்லது இலவச தொலைபேசி எண். 1503-ஐ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment