மத்திய
அரசின் சுகாதார சேவைகளில் பணிபுரியும்
மருத்துவர்களின் வயதை 62லிருந்து 65 ஆக
உயர்த்தும் திட்டத்திற்கு பாஜக அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்
தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சகத்தின் இந்த
முடிவு கடந்த மே31,2016லிருந்து
அமலாகிறது. தற்போது மத்தியசுகாதார சேவைகளில்
4000 மருத்துவர்களே உள்ளனர். மருத்துவர்களின் பற்றாக்குறையின் காரணமாகவும் நாடு முழுவதும் மருத்துவர்களின்
தேவை அதிகரித்துள்ளதாலும் மே மாதத்தில் மோடி
ஒரு பொதுக்கூட்டடத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
மத்திய அரசின் இந்த முடிவானது
சுகாதார சேவைகளில் பணிபுரியும் செயல்பாட்டாளர்களையும் மருத்துவ தொண்டு நிறுவனங்களையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.மருத்துவ கல்வியை அனைவருக்கும் கிடைக்கும்படி
செய்யும் திட்டங்கள் எதையும் அமல்படுத்த முடிவு
எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது...
No comments:
Post a Comment