மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநில பொதுச் செயலாளர் வே. துரை பாண்டியன் கூறியதாவது:7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. சம்பள கமிஷன்அறிக்கை கொடுக்கப்பட்ட வுடன், உயர்நிலை குழு பி.கே.சின்கா தலைமையில் அமைக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த பல மாதங்களாக சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எல்லாம் அதிகாரப்பூர்வமற்றது எனக் கூறுகிறார்கள். சம்பளக் கமிஷன் பரிந்துரையை அப்படியே அந்த உயர்நிலைக் குழு அமல்படுத்தி உள்ளது.1957ம் ஆண்டு 2வது சம்பளக் கமிஷ னிலேயே 14.2 சதவிகித ஊதிய உயர்வு பெற்றோம். தற்போது 7வது சம்பளக் கமிஷன் 14.3 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது. அப்போது இருந்த விலைவாசியும் தற்போது உள்ள விலைவாசியும் ஒன்றா? இப்போது பீன்ஸ் 180 ரூபாய் விற்கிறது.7வது சம்பளக் கமிஷன் சம்பளத்தை உயர்த்தி வழங்கும் அறிக்கையாக இல்லை. சம்பளத்தை பறிக்கும் அறிக்கையாக உள்ளது. உதாரணமாக ஆரம்பநிலை (எம்.டி.எஸ்.) ஊழியர் 15,750 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். இந்த 7வது சம்பளக் கமிஷன் மூலம் அவர் 18,000 ரூபாய் வாங்குவார். ஆனால் அவரிடமிருந்து ஓய்வூதிய திட்டத்திற்காக 1,800 ரூபாயும், காப்பீட்டுக்காக 3,300 ரூபாயும் பிடித்தம் செய்யப்படும். அவருக்கு ஊதிய உயர்வு 2,250 ரூபாய். ஆனால் பிடித்தம் செய்யப்போவதோ 3,300 ரூபாய். அப்படியென்றால் அவர் ஏற்கனவே வாங்கிய சம் பளத்தில் இருந்து கூடுதலாக 1,050 ரூபாய் பிடித்தம் செய்யப் படும்.மத்திய அரசு ஊழியர் களுக்காக ரூ.1.2 லட்சம் கோடி செலவு செய்ய வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். இவை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சம் முப்படை வீரர்கள், ஓய்வூதியதாரர்கள் 48 லட்சம் பேர் என அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதிலும் ரூ.60 ஆயிரம் கோடி எங்களிடமே வருமான வரி உள்ளிட்டவைகள் மூலம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் அரசு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.எனவே அரசு அறிவித்துள்ள 7வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம் ஏற்க வில்லை. எனவே வரும் ஜூலை 4ம் தேதிமுதல் 8ம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டங் கள் நடைபெறும். ஜூலை 11ம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளோம். இதில் ரயில்வே, தபால், பாதுகாப்புப் படை, வருமான வரி ஊழியர்கள் முழு அளவில் பங்கேற்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment