Tuesday, 14 June 2016

ஜூன்-14, ரத்த தானம் வழங்கும் தினம்...


உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. இந்நாள், , பி, இரத்த குழு அமைப்பைக் கண்டுபித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.
ரத்த தானம் என்பது ரத்தக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள இன்னொருவரின் உடலில்  செலுத்துவதற்காக தனது உடலின் ரத்தத்தை தானே முன்வந்து நன்கொடையாக வழங்குவதாகும். இந்த தானத்தின் மூலம் வழங்குநரும் பெறுநரும் இதன் பலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். விபத்தினாலோ, போர்முனை தாக்குதல்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், அறுவை சிகிச்சைகளின்போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். ஒருவருக்கு குருதியின் தேவை அவரது வாழ்வில் எந்த தருணத்தில் உண்டாகும் என்பதை முன்கூட்டி அறிந்து கூற முடியாது. ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாம் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம். ரத்த   தானம் செய்வோம் ! உயிர்களைக் காப்போம் !

No comments: