அருமைத் தோழர்களே ! இந்திய நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை அதிகாரிகளு க்கான3வது ஊதிய மாற்றக்குழு 3rd PAY REVISION COMMITTEE FOR CPSE பொதுத்துறை அதிகாரிகளுக்கான3வது ஊதியக்குழு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில்
3 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊதியக்குழு தலைவர் : நீதிபதி சதீஷ் சந்திரா - RETD JUDGE
திரு.ஜுகல் மகோபாத்ரா - RETD IAS
பேராசிரியர்.மனோஜ் பண்டா -DIRECTOR/IEG
திரு.சைலேந்திர பால்சிங் - RETD DIRECTOR(HR) /NTPC
ஆறு மாத காலத்திற்குள் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை குழு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள A, B, C மற்றும் D
பிரிவு பொதுத்துறைகளுக்கேற்ப
ஊதிய மாற்றம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ஊதிய மாற்றம் 01/01/2017 முதல் அமுல்படுத்தப்படும்.
தோழர்களே...கடந்த 01/06/2016 அன்று
NATIONAL CONFEDERATION OF OFFICERS ASSOCIATION
என்னும் NCOA 3வது ஊதியக்குழுவை அமைக்கக்கோரிடெல்லி DPE அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் 22/06/2016 அன்று தர்ணாவும்...27/07/2016 அன்று தலைநகரில் பேரணி நடத்திடவும் அறைகூவல் விடுத்திருந்தது.
பொதுத்துறை அதிகாரிகளின் தேசியக்கூட்டுக்குழுவின் தொடர்ந்த
வலியுறுத்தலால் காலத்தே ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நமது துறையிலும் ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கான பணிகள் விரைவில் துவங்கும் என நம்புகின்றோம்..
ஊழியர்களுக்கான பதவிப்பெயர் மாற்ற உத்திரவு 12/05/2016ல் வெளியிடப்பட்டது. அதனை கீழ்க்கண்டவாறு
நடைமுறைப்படுத்திட BSNL நிர்வாகம்
07/06/2016 அன்று மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
* ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்திட வேண்டும்.
* சேவைக்குறிப்பேட்டில் மாற்றம் செய்திட வேண்டும்.
* ERPயில் பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.
* SR.TOA(P ), SR.TOA(G), SR.TOA(T),
SR.TOA(TG) என்ற நான்கு பதவிகளும் ஒரே கேடராகக் கருதப்படும்.12/05/2016ல் இருந்து இது அமுலுக்கு வரும்.
No comments:
Post a Comment