Monday 6 June 2016

பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் பிறந்ததினத்தை அரசு கொண்டாட வேண்டும் N..நன்மாறன்.


பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பின் பிறந்ததினம், நினைவு தினத்தை தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டுமென மதுரை தெற்குத் தொகுதி முன் னாள் சட்டமன்ற உறுப் பினரும் சிறுபான்மைநலக்குழுவின் மதுரை மாவட்டத் தலைவருமான என்.நன்மாறன் கூறினார்.பாரிஸ்டர் ஜார்ஜ்ஜோசப் 129வது பிறந்த தினம் ஞாயிறன்று மதுரையில் கடைபிடிக்கப் பட்டது. அவரது சிலைக்குநன்மாறன் உள்ளிட்ட தலைவர்கள் மாலை யணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் என்.நன்மாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஜார்ஜ் ஜோசப் லண்டனில் வழக்கறி ஞருக்குபடிக்கும் காலத்தில் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர். காங்கிரசில் தம்மைஇணைத்துக் கொண்டுசுதந்திரப் போராட்டத் தில் ஈடுபட்டார். வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். கைரேகை சட்டத்தால் பாதிக்கப்பட்ட பிரமலைக் கள்ளர் சமூக மக்களுக்காக போராடியவர்.மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூரில் நடை பெற்ற பிரிட்டிஷ் ஆட்சியின் போது துப்பாக் கிச் சூட்டில் பலியானவர் களுக்காகவும் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக் காகவும் நடைபெற்ற வழக்கில் துணை நின்றவர். சிறுபான்மை சமூகத்தில் பிறந்த பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் தமிழுக் காகவும் தமிழக மக்களுக்காகவும் பல தொண்டுகள் செய்துள்ளார். அவரது பிறந்த தினம் மற்றும் நினைவுதினத்தை தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: