Thursday, 30 June 2016

BSNLEU மாவட்ட நிர்வாகி தோழர் S. பரிமள ரெங்கராஜ், பணி நிறைவு விழா ...

தோழர்களே ! நமது BSNLEU மாவட்ட சங்க  நிர்வாகி  அருமைத்தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்களுக்கு திண்டுக்கல் மனமகிழ் மன்றம் சார்பாக மிகவும் பிரம்மாண்டமான பணி நிறைவு விழா நடைபெற்றது  ... விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொன்டு சிறப்பித்தனர். தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்கள் இல்லத்தில் அற்புதமான அறுசுவை உணவு ஏற்பாடு செய்திருந்தார். தோழர் S. பரிமள ரெங்கராஜ், அவர்களுக்கு நமது BSNLEU சங்கம் சார்பாக எதிர்வரும் மாவட்ட மாநாட்டில், மாநிலச்   செயலர் வாழ்த்தோடு  ஒரு சிறப்பு மிக்க பணிநிறைவு பாராட்டு விழாவை மாவட்ட சங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 29-06-16 அன்று திண்டுக்கல் TRC சார்பாக நடைபெற்ற விழாவிலும் நாம் கலந்து கொன்டு பாராட்டினோம்.

No comments: