Saturday, 11 June 2016

09-06-16 மதுரை GM(O) கிளையின் BSNLEU மாநாடு . . .

அருமைத் தோழர்களே 1 கடந்த 09-06-16 அன்று மதுரை பொது மேலாளர் அலுவலக கிளையின் BSNLEU மாநாடு,  தலைவர்  தோழர்.L. செல்வராஜ் தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.   மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று, தோழர்.S. சாஜன் உரை நிகழ்த்தினார். தோழியர்.ராதிகா அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாநாட்டை துவக்கி வைத்து  மாவட்டச் செயலர் தோழர். S. சூரியன் உரை நிகழ்த்தினார். ஆண்டறிக்கையை சமர்ப்பித்து கிளைச் செயலர் தோழியர்.N.ஈஸ்வரி,  உரை நிகழ்த்தினார். வரவு -செலவு கணக்கை தோழியர்.S.M.புஷ்பராணி சமர்ப்பித்தார். ஆண்டறிக்கை, வரவு-செலவு ஏற்கப்பட்டது. அதன்பின் புதிய நிர்வாகிகள் தேர்தலை  மாவட்டச் செயலர் தோழர். S. சூரியன் நடத்தி வைத்தார். 15 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டது. தலைவர், செயலர். பொருளர் முறையே, தோழர்கள்.V.சுப்புராயலு, N.ஈஸ்வரி, S.M.புஷ்பராணி  ஆகியோர் .தேர்ந்தேடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி மாநில உதவிச் செயலர் தோழர்.C. செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். மதுரை North & SDOT கிளைச் செயலர்கள் தோழர்கள் சிக்கந்தர், முருகேஷ் பாபு ஆகியோர் வாழத்துரை நிகழ்த்தினர்.  தோழியர்.S.M.புஷ்பராணி நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.

No comments: