Thursday, 16 June 2016

15-06-16 மதுரை GM(DEV)கிளைமாநாடு . . .

அருமைத் தோழர்களே ! 15-06-16 அன்று மாலை நமது மதுரை GM(DEV) கிளையின் மாநாடு கிளைத் தலைவர் தோழர் .டி. ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி உரையை தோழியர் சுலேகா நிகழ்த்தினார். வரவேற்புரையை  கிளை செயலர் தோழர்.டி . கண்ணன் நிகழ்த்தினார், .  . . . 
மாநாட்டை துவக்கிவைத்து மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். ஆண்டறிக்கையை கிளைச் செயலர் தோழர்.டி. கண்ணன் சமர்ப்பித்தார், வரவுசெலவு கணக்கை, பொருளர் தோழர் .பி.பரமசிவம்  சமர்ப்பித்தார். ஆண்டறிக்கை-வரவு செலவு  ஏற்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் 15 பேர்   ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டது. தலைவர் ,செயலர்,பொருளர்  முறையே  தோழர்கள்,ஈஸ்வரன்,சுருளிஆண்டவர்,பரமசிவம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில உதவிச் செயலர் தோழர். சி. செல்வின் சத்தியராஜ், மாவட்ட நிர்வாகி ஆகிய இருவரும் வாழத்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் பனி சிறக்க நமது மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.மாநாட்டு நிகழ்வு குறித்து தினமலர் பத்திரிக்கை செய்தி.....


No comments: