Thursday 9 June 2016

அமெ. அணு உலைகளுக்கு தாராள அனுமதி ஒபாமா - மோடி.

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாட்டின்படி, அமெரிக்க நிறுவனங் களால் கழித்து கைவிடப்பட்ட அணு உலைகள் இந்தியாவில் குவியும் ஆபத்து தீவிர மடைந்துள்ளது.முதல்கட்டமாக அமெரிக்க நிறுவனங் களால் இந்தியாவில் அமைக் கப்படும் ஆறு அணுஉலைகளை நிறுவு வதற்கான தயாரிப்புப் பணிகளை உடனடி யாக துவக்குவது என்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் செவ்வாயன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளாக இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு உள்ளிட்ட பின்னணி களால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் செயலாக்கம் தற்போது முதல் முறையாக செயல்வடிவம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.பதவியேற்ற இரண்டு ஆண்டுகளிலேயே ஆறாவது முறையாக அமெரிக்காவுக்கு பயணம்மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு முறையும் அமெரிக்காவுடன் இந்தியாவை மிக நெருக்கமான கூட்டாளியாக மாற்றிக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை களையும், உடன்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே தற்போது மேற்கொண்டுள்ள பயணத்தில் இந்தியா - அமெரிக்கா அணுசக்தி உடன்பாட்டை செயல் படுத்துவதற்கான உடன்பாடு ஒபாமா - மோடி இடையே எட்டப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. புதனன்று வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்து பேசிய பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்தியா - அமெரிக்கஅணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்துவதற் கான ஒப்பந்தங்கள் 2017 ஜுன் மாத வாக்கில் இறுதி செய்யப்பட்டு பணிகள் உடனடியாக துவங்கும் என்றும், இது நிறைவேறினால், இந்த உடன்பாட்டின் மிகப்பெரும் அம்சமாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின்போது பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் உடன்பாட்டை நிறைவேற்றுவது தொடர்பாகவும் விவாதிக்கப் பட்டதாக கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதுதவிர இந்தியா - அமெரிக்கா இடை யில் பாதுகாப்புத்துறையில் முழுமையான ஒத்துழைப்பு மேற்கொள்வது என இச்சந்திப்பின்போது இருவரும் பேசினர்.ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், காலநிலைமாற்றம் தொடர் பாகவே ஒபாமாவும் மோடியும் பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், முற்றிலும் ஆசியா, பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் ராணுவ திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியா முழுமையாக உதவி செய்வது குறித்தே பேசப்பட்டதாக அமெரிக்க செய்திகள் கூறுகின்றன.

No comments: