மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் 2013-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப் பட்டார். இதே பாணியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி கர்நாடகாவில் முற்போக்கு எழுத்தாளர் கல்புர்கி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்குகள் குறித்து, சிபிஐ மற்றும் கர்நாடக சிஐடி அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக விசாரணை நடத்தினர். மூவரின் கொலையிலும் பல ஒற்றுமைகள் இருப்பது தெரியவந்தது. மூவரும் 7.65 எம்எம் ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மூவருக்கும் எதிரான இந்துத்துவ அமைப்பினரும், அடிப்படைவாதிகளும் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.
இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா அதனை ஒட்டியுள்ள கர்நாடக எல்லையோர மாவட்டங்களிலும் தீவிரமாக இயங்கிவரும் இந்துத்துவா அமைப்பினரை கண்காணித்தனர். இந் நிலையில் கடந்த 10-ம் தேதி தபோல்கர் கொலை வழக்கில் இந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த வீரேந்திர தாவ்டேவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை காவலில் எடுத்து விசாரித்த போது, சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தபோல்கர் மட்டுமில்லாமல், பன்சாரே, கல்புர்கி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த 2009-ம் ஆண்டு கோவாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் சனாதன் சன்ஸ்தா அமைப்பின் தலைவர் அல்கோரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வீரேந்திர தாவ்டே வின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் தபோல்கர், பன்சாரே குறித்த முக்கிய ஆவணங் களும், பென் டிரைவ்களும் சிக்கின.
சிபிஐ அதிகாரிகள் வீரேந்திர தாவ்டேவின் மின்னஞ்சல் உள்ளிட்ட வற்றை ஆராய்ந்தபோது, தபோல்கரை கொல்ல 3 மாதங்களுக்கு முன்பிருந்து வீரேந்திர தாவ்டே, அல்கோர் மற்றும் 30 பெயர் குறிப்பிடாத நபர்களுடன் தினமும் பேசியுள்ளார். அந்த மர்ம நபர்கள் வீரேந்திர தாவ்டேவுக்கு பல உதவிகளை செய்து தருவதாகவும், ஆட்களையும், ஆயுதங்களையும் ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளனர்.
இந்துத்துவா எதிர்ப்பாளர்களைத் தாக்குவதற்காக 15,000 பேர் கொண்ட ராணுவம் ஒன்றை அமைக்கவும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டமிட்ட தாகவும் தாவ்டே கூறியிருந்தார். இந்த இயக்கத்தைச் சேர்ந்த மல் கோண்டா பாட்டீல் என்பவர் கோவா வுக்கு வெடிகுண்டுகளை கொண்டு செல்லும்போது உயிரிழந்துவிட்டதாக வும் தாவ்டே தெரிவித்திருக்கிறார். தபோல்கரை கொல்ல கர்நாடக எல்லை யில் உள்ள பெல்காமில் தெரிந்த நண்பரின் மூலம் துப்பாக்கியும், தோட்டாக்களையும் வாங்கினோம். இதற்கு கடலோர கர்நாடகாவில் பலமாக உள்ள இந்துத்துவ அமைப்பினர் உதவிகரமாக இருந்தனர் என தாவ்டே கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி, தார்வாட், மங்களூரு உள்ளிட்ட இடங்களிலும், கோவாவிலும் சனாதன் சஸ்தா அமைப்புக்கு மிகவும் நெருக்க மான பலர் இருக்கின்றனர். இந்த கும்பல் இந்தியாவில் உள்ள இந்துத் துவா எதிர்ப்பாளர்களை கொல்ல ஆயுதங்களை இலவசமாக கொடுக்க தயாராக இருந்தது.
வீரேந்திர தாவ்டேவை சிபிஐ அதிகாரிகள் வருகிற திங்கள்கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்கின் றனர். இதையடுத்து அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கர்நாடக சிஐடி அதிகாரிகள் மகாராஷ்டிர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கெனவே சந்தேகப் பட்டியலில் இருந்த வீரேந்திர தாவ்டே, அல்கோர் மட்டுமில்லாமல் மேலும் 6 பேருக் கு மூவர் கொலை வழக்கில் நேரடியா கவோ, மறைமுகமாகவோ தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. தபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொலை வழக்கு தொடர்பான மும்பை, பெங்களூரு தடயவியல் அறிக்கை யில் பல ஒற்றுமைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. எனவே இதை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்.
No comments:
Post a Comment