Sunday 5 June 2016

4-6-16, நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக 4-6-16, சனிக்கிழமையன்று வெற்றி  விழா மிக மிக சிறப்பாக, இனிப்புடன் மதுரை தல்லாகுளம் CSC/TRCயில் நடைபெற்றது. நிகழ்சிக்கு மாவட்டத் தலைவர் தோழர்.C. செல்வின் சத்தியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தோழர். S. சூரியன் ஆய்படு பொருள்களின் மீதான அறிமுக உரையை  நிகழ்த்தினார்.  விவாதத்தில் 17 தோழர்கள் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்தனர்.


* நமது BSNLEU சங்கம் அகில இந்திய அளவில், (49.56%) 81195 வாக்குகள் பெற்று தொடர்ந்து "டபுள் ஹாட்ரிக்" வெற்றியாக  ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. இப்படி பட்ட வெற்றி வேறு எந்த பொதுத்துறையிலும்  இல்லாத அளவிற்கு பெற்றுள்ளோம்.  
* நமது BSNL அரங்கில் உள்ள மொத்தம் உள்ள 35 மாநிலங்களில் நமது BSNLEU சங்கம் 19 மாநிலங்களில் 50% க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளோம். 
* மேலும் 8 மாநிலங்களில் No.1 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளோம்.
* நமது மதுரை மாவட்டத்திலும் 6 முறை வெற்றி பெற்றுள்ளோம். NFTE சங்கத்தில் சிலரின்  தரமற்ற , முகம் சுளிக்ககூடிய, தரங்கெட்ட தவறான, கோயபல்ஸ் பொய்களையும் மீறி ஊழியர்கள் நமது BSNLEU சங்கத்திற்கு வெற்றியை தந்துள்ளார்கள். வெற்றிக்காக உழைத்திட்ட ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மதுரை மாவட்ட சங்கம் தனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
* NFTE சங்கம் வெறும்  8 இடங்களில் மட்டும் தான் நம்மை காட்டிலும் மிக சொற்ப வாக்குகள் கூடுதல் பெற்றுள்ளது. அதுவும், எந்த இடத்திலும் 50% வாக்குகளை பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* செயற்குழுவில் நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழர்.R.சண்முகவேல் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா மிக எழுச்சியாக நடைபெற்றது. தோழர்.R.சண்முகவேல் அவர்களுக்கு  மோதிரத்தை அணிவித்து , மாநில அமைப்பு செயலர் தோழர். P. சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார்.  தோழர் S. ஜான் போர்ஜியா சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசினார். ஒப்பந்த ஊழியர்  சங்க மாவட்ட செயலர் தோழர்.N. சோனைமுத்து வாழ்த்தி பேசினார். தோழர்.R. சண்முகவேல் ஏற்புரை நிகழ்த்தினார்.
முடிவுகள் தீர்மான வடிவில்...
    #  10.06. 16 அன்று  தூத்துக்குடியில் நடைபெறும் தமிழ் மாநில அளவிலான விரிவடைந்த செயற்குழு, மற்றும்  வெற்றிவிழாவில் பெருந்திரளாக கலந்து கொள்வது.
    #   கிளை மாநாடுகளை மாவட்ட செயலரிடம் தேதி பெற்று ஜூலைக்குள்  நடத்தி முடிப்பது.
    #   கிளை மாநாடுகள் முடிந்தவுடன், மாநில செயலரிடம் தேதி பெற்று ஆகஸ்ட் மாதத்தில் மாவட்ட மாநாட்டை நடத்துவது. 
     #  ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அனைத்து கிளைகளும் புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திட வேண்டும்.
 # ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனை மற்றும் ஸ்தலமட்ட பிரச்சனைகளை தொகுத்து நிர்வாகத்திற்கும் & மாநில சங்கத்திற்கும் சமர்ப்பித்து, நிர்வாகத்துடன்  விவாதிப்பது, பிரச்சனைகள் தீர்வு ஏற்படா பட்சத்தில் மாநில சங்க ஆலோசனை பெற்று தேவை ஏற்படின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வது உள்ளிட்ட 7 முடிவுகள் எடுக்கப்பட்டது. G.M(O)கிளைச்செயலர் தோழியர்.N. ஈஸ்வரி தனது மகன் திருமண மகிழ்வை வெளிப்படுத்தும் முகத்தான் வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவை வழங்கினார்.
            இறுதியாக மாவட்ட பொருளர் தோழர்.S. மாயாண்டி  நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

No comments: