அருமைத் தோழர்களே ! கடந்த இரு நாட்களாக மைசூரில் AIBSNLEA சங்கத்தின் 5 வது அகிலஇந்திய மாநாடு மிக எழுச்சியுடன் கூடிய , பேரணி, கலை நிகழ்ச்சி ஆகியவற்றோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இம்மாநாட்டில் நமது BSNLEU சங்கத்தின் சார்பாக நமது பொதுச் செயலர் தோழர்.P. அபிமன்யு மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அத்தோடு நமது G.S தனது உரையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நமது BSNL-CMD பெங்களூரில் பேசும் பொழுது, BSNL ஊழியர்கள் 1.1.2017 புதிய சம்பள மாற்றம் பெற இயலாது, அதற்கு காரணம் BSNL நஷ்டத்தில் உள்ளது என தெரிவித்திருந்தார். நமது BSNLEU சங்கம் உடனடியாக நமது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. DPE வழிகாட்டுதலின் படி BSNLலில் 1.1.2017 முதல் பணி புரியும் அனைவருக்கும் சம்பள மாற்றம் செய்தாக வேண்டும் என்ற வலுவான உரையை AIBSNLEA- AICயில், தோழர்.P. அபிமன்யு வைத்ததை கேட்டுக்கொண்டிருந்த நமது BSNL-CMD அவர்கள், அவரது வாழ்த்துரையில் தோழர்.P. அபிமன்யு உரையை மேற்கோள்காட்டி நிச்சயம் 1.1.2017 முதல் சம்பள மற்றம் BSNLலில் பணிபுரிபபவர்களுக்கு உண்டு என்பதை மாநாட்டின் பலத்த கரஒலிக்கிடையே தெரிவித்தார்.( "We will make 3rd PRC a success." The house received this statement of the CMD BSNL with a big applause. BSNLEU heartily welcome the statement of the CMD BSNL...) AIBSNLEA அகில இந்திய மாநாடு எல்லா வகையிலும் வெற்றிபெற நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது AIBSNLEA தமிழ் மாநில செயலர் தோழர்.S.சிவகுமார் அகில இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் , அவரது பனி சிறக்க நமது வாழ்த்துக்கள்...என்றும் தோழமையுடன், S. சூரியன் D/S-BSNLEU.
No comments:
Post a Comment