Friday, 17 June 2016

பதவி விலகு!போராடுகிறது கிரீஸ் . . .


மக்களின் விருப்பத்தை மீறி சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் உரிமைகளையும், சலுகைகளையும் பறிக்கும் அரசு பதவி விலக வேண்டும் என்று கோரி கிரீசில் போராட்டம் நடந்துவருகிறது.கிரீசில் ஐரோப்பிய யூனியன், .எம்.எப் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றிடம் கடன் வாங்கியதற்காக பல்வேறு மக்கள் விரோதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நிர்ப்பந் தம் எழுந்தது. அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதை மீறி வலதுசாரி ஆட்சியாளர்கள் திணிக்க முற்பட் டனர். அப்போது சிரிசா (இடது சாரிக்கூட்டமைப்பு) என்ற பெயரில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து மக்களைச் சந்தித்தன. அடுத்து நடைபெற்ற தேர்தலில் சிரிசா ஆட்சியைப் பிடித்தது. அலெக்சிஸ் சிப்ராஸ் பிரதமராகப் பொறுப்பேற்றார். நிதி நிறுவனங்களின் நிர்ப்பந் தங்களுக்கு அடி பணிய மாட் டேன் என்று உறுதிமொழி எடுத் துக் கொண்டார்.ஆனால், பதவிக்கு வந்தவுடன், நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை முனைப்புடன் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக் கிறார். கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அரசின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மக்கள் பெருமளவில் எதிர்ப்புப் பேரணி களில் பங்கேற்று வருகிறார்கள். புதனன்று கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடைபெற்ற பேரணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். பேரணியின் நிறைவில் நாடாளுமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் இணைந்துபதவி விலகுஎன்ற இயக்கத்தையும் துவக்கியுள்ளன.கிரீசின் இரண்டாவது பெரிய நகரமான தெஸ்சலோனிகியிலும் பெருந்திரள் பேரணி நடந்தது. அதில் பங்கேற்ற மக்கள், “பதவி விலகு”, “உங்களை மக்கள்விரும்பவில்லை. படை, பரிவாரங் களோடு வெளியேறிச் செல்என்றமுழக்கங்கள் அந்தப் பேரணியில் எழுப்பப்பட்டன. பெரும் தயாரிப்புகள் எதுவும் இல்லாமல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே மக்களைத் திரட்டும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பேரணிகளை வலதுசாரி எதிர்க்கட்சிகள்தான் தூண்டி விடுகிறார்கள் என்று சிரிசா கூட் டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

No comments: