Tuesday, 2 July 2013

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு NLC ஊழியர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்

 04.07.2013 மாலை 5.00 மணி

ஜான்சி ராணி பூங்கா, மதுரை  

மத்திய அரசே !  NLC பங்குகளை விற்காதே !!

மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் பொதுத்துறை நிறுவன பங்குகளை பெருமுதலாளிகளுக்கு விற்பனை செய்து வருகின்றது. கடந்த BUDGET-ல்  கூட STEEL AUTHORITY OF INDIA , BHEL, IOC  போன்ற நிறுவனங்களின் பங்குகளை ரூபாய் 30,000 கோடிக்கு விற்கப் போவதாக அறிவித்தது.

அரசு மூலதனத்தை எடுத்து தனியாரின் கைகளுக்கு மாற்றுவதே மத்திய அரசு கொள்கையாக கொண்டுள்ளது. நவீன தாராளமய கொள்கைகள் நமது நாட்டின் வளர்ச்சியை பலவீனப்படுத்தி உள்ளது.
தற்போதும் INSURANCE, BANK, TELECOM , PETROLEUM போன்ற நவரத்னா நிறுவனங்களை தனியார் கைகளில் ஒப்படைக்க துடிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் நெய்வேலியில் உள்ள நிலக்கரி நிறுவனமான NLC-ன் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 
2G SPECTRUM ஒதுக்கீடு செய்வதில் 1.76 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு; நிலக்கரி படுகைகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் 1.86 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் இந்திய ஆட்சியாளர்கள். மத்திய காங்கிரஸ் கட்சி கடை பிடிக்கும் அதே கொள்கையை தான் BJP-ம் கடை பிடிக்கிறது. BJP ஆட்சி காலத்தில் பொதுத்துறை பங்கு விற்பனைக்கு ஒரு தனி அமைச்சரே நியமித்தனர்.

2003 மின்சார மத்திய சட்டத்தின் படி, தனியார் நிறுவனங்களின் மின் உற்பத்திக்கு  ஊக்கம் அளித்ததால், இந்தியாவின் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு  ஏற்பட்டு, தொழில்நலிவுற்று மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது நெய்வேலி NLC நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு பெற்று வரும் 1116 மெகா வாட்டையும் தட்டிபறித்திட மத்திய அரசு முயல்கிறது. 

எனவே, நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்து  "NLC ஊழியர்கள் 03.07.2013 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை" நடத்த உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை மதுரை அனைத்து தொழிற் சங்கங்கள் ஆதரிப்பதோடு, மத்திய அரசை கண்டித்து பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.

CITU - AIIEA - BSNLEU - BEFI - MUTA - TANTSAC தொழிற்சங்க கூட்டமைப்பு - மதுரை.

No comments: