Tuesday 28 January 2014

மீனவர்கள் பேச்சுவார்த்தையில் பல முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த யு.அருளானந்தம் பேசியது:
இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையும் சுமுகமாக, பயனுள்ளதாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவுகளை முதல்வர் ஜெயலலிதா மற்றும் இருநாட்டு அரசுகளின் கவனத்துக்கும் எடுத்துச் சென்று, அனைவரின் ஒப்புதலைப் பெற்றப் பிறகே முடிவுகள் வெளியிடப்படும்.
கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தையில் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன?
பதில்: பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அரசுக்கு அனுப்பி அதன் பின்னர் தெரிவிக்கப்படும்.
கேள்வி: பேச்சுவார்த்தையில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன?
பதில்இரு நாட்டு மீனவர்களும் சுமுகமான முறையில் மீன் பிடிப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை விவரங்கள் அரசுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன்படி, பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இரு நாட்டு அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகு செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
இலங்கை நாட்டின் மீனவ சங்கப் பிரதிநிதி டி.சதாசிவம், ஜஸ்டின் ஜோய்சா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியது:
இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தையில் பல விஷயங்கள் குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தீர்மானங்களையும் வகுத்துள்ளோம்.
இந்தத் தீர்மானங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அவர்களின் ஒப்புதலைப் பெற்று முடிவுகளை வெளியிடுவோம்.
கேள்வி: பேச்சுவார்த்தையில் எத்தகைய விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன?
பதில்: இரு நாட்டு மீனவர்களின் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக கடலில் மீன்பிடிக்கும்போது தமிழகம் மற்றும் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட பல விஷயங்கள் உள்ளன. இந்த தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கேள்வி: பாரம்பரிய பகுதியான பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதே?
பதில்: அந்தப் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் விவாதித்து சுமுக முடிவு எடுத்துள்ளோம். இதன் விவரங்கள் இரு நாட்டு அரசுகளுக்கும் தெரிவிக்கப்படும். அரசுகளின் ஒப்புதல் கிடைத்த பிறகு முடிவினை அறிவிப்போம்.

கச்சத்தீவு பிரச்னை என்பது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான விவகாரம். ஆனால், பிரச்னையில்லாமல் மீன் பிடிப்பது தொடர்பாகவே நாங்கள் பேச்சுவார்த்தையில் விவாதித்துள்ளோம் என்றார் அவர்.                                    நன்றி.....தினமணி 

No comments: