Saturday 8 June 2013

BSNL ஊழியர்கள் + அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு  -   மதுரை மாவட்டம் 

ஜூன் 12 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் 

தோழர்களே! 
நமது நாட்டிலுள்ள 260 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 1.1.2007 முதல் 78.2%  IDAவை இணைத்து ஊதிய மாற்றம் செய்திட  DPE 02.04.2009 அன்றே உத்தரவிட்டுள்ளது.  ஆனால் நமது BSNL துறையில் மட்டும் 68.8% IDAவை இணைத்து ஊதிய மாற்றம் செய்யப்பட்டது.

நியாயம் கோரி போராட்டம் 

BSNL நிறுவனத்தின் நியாயமற்ற போக்கினை மாற்றக்கோரி BSNL ல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து ஒன்றாக போராடியதன் விளைவாக 78.2% IDAவை  அடிப்படை சம்பளத்துடன் இணைத்து ஊதிய மாற்றம் செய்யப்படும் என்று BSNL நிர்வாகம் நமது கூட்டமைப்பு தலைமையுடன் கடந்த 12.06.2012 அன்று உடன்பாட்டை ஏற்படுத்தியது.

ஒப்பந்தம் ஏற்பட்டு ஓர் ஆண்டு 

ஒப்பந்தம் ஏற்பட்டு ஓராண்டு காலம் முடிந்தும் உடன்பாட்டை அமுல்படுத்த DOT மற்றும் BSNL நிர்வாகம் காலந்ததாழ்த்துகிறது. DOT மற்றும் BSNL நிர்வாகத்தின் காலதாமதத்தைக் கண்டித்து நாடெங்கும் மே 22ந் தேதி ஆர்ப்பாட்டமும் ஜூன் 5ந் தேதி தர்ணா ஆகிய இரண்டுகட்ட போராட்டம் நடத்திய பின்பும் DOT மற்றும் BSNL நிர்வாகம் நமது கோரிக்கையை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை.  எனவே, உடனடியாக ஒப்பந்தத்தை அமுல் படுத்த கோரி 12.06.2013 முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு நமது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளன.

மறுக்கப்பட்ட உரிமையை பெற்றிட 

நமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 78.2% IDA இணைப்பான நமது உரிமையை  வென்றெடுக்க 12.06.13 முதல் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று, வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன் 
எஸ். சூரியன்   கே. முருகேசன்  எம். சந்திரசேகரன்  எஸ். கருப்பையா
    DS-BSNLEU                DS-NFTE                     DS-SNEA                     DS- AIBSNLEA
என். முருகன்   எஸ். கந்தசாமி    எல். கண்ணன்   எஸ். முத்துக்குமார்
         DS-TEPU                DS-SEWA                     DS-WRU                        DS-FNTO

1 comment:

Unknown said...

78.2 பற்றி இப்போதுதான் சரியாகப் புரிகிறது .. நன்றி ,,