Monday 24 June 2013

மக்கள் சொத்தான NLC-ன் 5% பங்கு விற்பனை - மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கை

தோழர்களே !

தமிழகத்தில் கேந்திரமான பொதுத்துறை நிறுவனமான மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 5 சதவீத பங்குளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது. 

மத்திய அரசின் இத்தகைய முடிவுக்கு நமது BSNL ஊழியர் சங்கம் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கிறது.

தென்இந்தியாவின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்கிற NLC நிறுவனத்தின் 5% பங்கு விற்பனை எதிராக தொழிலாளர்கள் ஒன்று பட்டு போராட முடிவு செய்துள்ளனர். NLC-யின் 1% பங்கினைக்கூட விற்பதற்கு தமிழக தொழிலாளர்களும், உழைப்பாளி மக்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். லாபகரமாக இயங்கி வரும் NLC நிறுவனத்தில் 5% பங்கு விற்பனை என்பது மத்திய அரசின் தனியார் மாய கொள்கை ஆகும்.

மத்திய அரசின் இப்போக்கிற்கு எதிராக தமிழகத்தில் ஆளும் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும்,தொழிற்சங்கங்களும் கண்டன குரல் எழுப்பியுள்ளனர். எதிர் வரும் 3-7-2013 முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததிற்கு NLC யில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அறை கூவல் விடுத்துள்ளன.


 மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்.




என்றும் தோழமையுடன் 
எஸ். சூரியன் 
மாவட்ட செயலர் 

No comments: