Saturday 19 April 2014

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவரிடம்...

சேலம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த்தும் மோடியும் . . . 
தமிழகத்தில் தலைவிரித்தாடும் சில பிரச்சனை களை தீர்த்து உதவுமாறு மோடியிடம் ஒரு மனுவை விஜய்காந்த் தந்துள்ளாராம்! இந்த பிரச்சனைகளை மோடி 12 ஆண்டுகள் தான் ஆண்ட குஜராத்தில் தீர்த்துவிட்டாரா என்பதைகேப்டன்தெரிந்து கொண் டால் நல்லது!
குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்த மான குடிநீர் கிடைக்க வகை செய்யவேண்டும்.
குஜராத்தின் 184 தாலுக்காக்களில் 74ல் குடிநீர்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்ற ஆண்டு மட்டும் 17 மாவட்டங்களில் 10000க்கும் அதிகமான கிராமங்களும் நகரங்களும் குடிநீர் இன்மையால் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்பட்டது. அம்ரேலி போன்ற நகரங்களில் குடிநீர் பிரச்சனைக்காக பந்த் நடத்தப்பட்டது. இந்தியாவிலேயே குஜராத்தில் மட்டும்தான் சாதி அடிப்படையில் குடிநீர் பிடிக்க வேண்டும். முதலில் பட்டேல்கள், பனியாக்கள் போன்ற உயர் சாதியினரும் அடுத்து பிற்படுத்தப்பட்டோரும் இறுதியாக தலித் மக்களும் பிடிக்க வேண்டுமென பகிரங்கமாக அறிவிப்பு பலகை எழுதி வைக்கப்பட்டுள்ள மாநிலம் மோடியின் குஜராத் ஆகும்.
நதிகளை இணைத்து தேசியமயமாக்கி, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தி, விவசாயம் பெருகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் செய்ய வேண்டும்.
குஜராத்தில் மோடியின் ஆட்சி காலத்தில் 843விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மோடிக்கு முன்பு 10 சதவீதமாக இருந்த குஜராத் விவசாய வளர்ச்சி மோடிக்கு பின்பு 4 சதவீதமாக குறைந்துவிட்டது.
தடையில்லா மின்சாரம் கொண்டு வந்து, தொழில் உற்பத்தியைப் பெருக்கி, படித்த, மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
குஜராத்தில் மின் இணைப்பிற்காக விண்ணப்பித்து விட்டு காத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 4.5 இலட்சம் பேர்! சுமார் 10000 கிராமங்கள் மின் இணைப்பு இன்றி தவிக்கின்றன. குஜராத்தில் 16 இலட்சம் படித்த வேலையில்லாதோர் உள்ளனர் என அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த சில வருடங்களில் சுமார் 5000 நடுத் தர, சிறிய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இலட்சக்கணக் கானோர் வேலை இழந்துள்ளனர்.
கனிம வளங்களைப் பாதுகாக்க இன்னும் கடுமை யான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.
கனிம வளங்களையும் நிலம் உட்பட இயற்கை சொத்துகளையும் முதலாளிகளுக்கு சூறையாட அனுமதி அளித்ததில் குஜராத் இந்தியாவிலேயே முத லிடம் வகிக்கிறது. கனிமவள கொள்ளையில் சிறைக்குச் சென்ற கர்நாடக எடியூரப்பா மோடியுடன் கூட்டணி
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
பாகிஸ்தான் சிறைகளில் வாடும் குஜராத் மீனவர்களின் பிரச்சனைகளையே தீர்க்க முடியாதவர் எப்படி தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும்?
அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி, எல்லோருக்கும், எல்லா இடத்திலும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2005 முதல் 2014 வரை ஒரு புதிய மருத்துவமனையோ அல்லது ஆரம்ப சுகாதர நிலையமோ குஜராத்தில் உருவாக்கப்படவில்லை. குஜராத்தில் அரசு மருத்துவ மனைகளின் தரம் சீரழிந்து வருகிறது! அரசு மருத்துவமனைகளில் 2000 மருத்துவர்கள் இடம் காலியாக உள்ளது. எதிலும் எங்கும் தனியார்மயம் என்று முழங்கும் மோடி எப்படி அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவார்? குழந்தைகள்/பெண்கள் நலனில் குஜராத் 11வது இடத்தில் பின்தங்கியுள்ளது.
அரசுப் பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்
மே மாதம் 2012ல் குஜராத் உயர் நீதி மன்றத்தில் மோடி அரசாங்கம்சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவச கல்வி தருவதற்கு எங்களிடம் நிதி வசதி இல்லைஎன கூறியது. 2002ம் ஆண்டு அரசு பள்ளிகளில் 80 லட்சம் குழந்தைகள் படித்தன. 2012ம் ஆண்டு இது 60 லட்சமாக குறைந்துவிட்டது.தன் சொந்த மாநிலத்தில் செய்யத் தவறியதை தமிழகத்தில் செய்து தருமாறு மோடியை கேப்டன் அவர்கள் கேட்பது கூரை ஏறி கோழி பிடிக்க இயலாதவனை வானம் ஏறி வைகுண்டம் போகுமாறு சொல்வது போல உள்ளது.---தீக்கதிர்.

No comments: