Tuesday 1 April 2014

RGB தேர்தலில் BSNLEU +NFTE கூட்டணி வெற்றி . . .

அருமைத் தோழர்களே! அனைவருக்கும் நன்றிகள் பல..பாராட்டுக்களை நமது BSNLEU மதுரை மாவட்டசங்கம் மனபூர்வமாக தெரிவித்துக்கொள்கிறது. நமது கூட்டணிவெற்றிக்காக அயராது உழைத்திட்ட அனைவருக்கும் மனம்திறந்த பாராட்டுக்களை பதிவு செய்கிறோம்.01.04.2014 அன்று மதுரையில்  நடைபெற்ற சென்னை கூட்டுறவு சொசைட்டி RGB தேர்தலில் மதுரை மாவட்டத்திற்கான 4 பதவிகளிலும் நமது இரு சங்கங்களின் சார்பாக BSNLEU-2, NFTE-2 வேட்பாளர்களாக நிறுத்திய தோழர்களும் RGB-க்களாக  மகத்தான வெற்றி பெற்றுள்ளார்கள்.இந்த வெற்றிக்கு நம்மோடு ஆதரவு நல்கிட்ட SNEA,AIBSNLEA,SEWA சங்கத்திற்கும் இத் தருணத்தில் உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றிபெற்றுள்ள   புதிய  நான்கு RGB -க்கள்.... 
கிடைத்த அனுபவத்தையும்,வெற்றியையும் முன்னெடுத்து செல்வோம். உறுப்பினர்கள் நலன் பேணுவோம்.என இத் தருணத்தில் வெற்றி பெற்ற 4 RGB-க்களும் உறுதி மேற்கொண்டுள்ளனர்.
                             ..... என்றும் தோழமையுடன் ---எஸ்.சூரியன்,D/S-BSNLEU.

No comments: