Wednesday 13 January 2016

தமுஎகச-வின் 40 ஆண்டு சிறப்பு மாநில மாநாட்டு வரவேற்பு குழு நன்றி அறிவிப்பு கூட்டம் 12.01.16.

அருமைத் தோழர்களே ! தமுஎகச-வின் 40 ஆண்டு சிறப்பு மாநில மாநாட்டு வரவேற்பு  குழு நன்றி அறிவிப்பு கூட்டம் 12.01.16 அன்று தோழர் ஸ்ரீரசா தலைமையில் , மதுரை அரசு ஊழியர் 
சங்க கட்டிடத்தில் மிக மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது  . . . 
மரியாதைக்குரிய இசை மேதை, மம்மது , பொதுச் செயலர் தோழர். சு.வெங்கடேசன், மாநில துணைச் செயலர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில உதவிச் செயலர் தோழர். வேலாயுதம், மாநில துணைத் தலைவர் தோழர். ஸ்ரீதர், பெரியவர் ஜான்மோசஸ், மாவட்ட செயலர் தோழர் சாந்தாராம், மேடை கலைவாணர் தோழர்.என்.நன்மாறன் ஆகியோரின் கருத்து செறிவு  மிக்க உரையை நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட அரங்கில் நமது BSNLEU அமைப்பின் சார்பாக மாவட்ட தலைவர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் மற்றும் மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் ஆகியோரும் கலந்து கொண்டு பயன் பெற்றோம்.
 நிறைவாக பொருளாளர் தோழர் முருகேசன் நன்றி கூற, இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.
தமுஎகச-வின் எழுச்சி மிக்க பனி தொடர நமது  BSNLEU மனப்பூர்வமாக வாழ்த்துகிறது.

No comments: