அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர் , எஸ். சூரியனுக்கு 30-04-16 அன்று மாலை மாவட்டத் தலைவர் தோழர் சி . செல்வின் சத்தியராஜ் தலைமையில் மதுரை லெவல்-4 வளாகத்தில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழா மிக மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கில் பெண்களும் ஆண்களுமாக தோழர்கள் அனைவரும் அலை கடல் எனத்திரண்ட அன்பு நெஞ்சங்களுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். . .
பாராட்டு விழாவின் துவக்கத்தில் நமது வில்லாபுரம் கிளைச் செயலர் தோழர். கிருபானந்தனின் புதல்வர் "மேஜிக் ஷோ " நடத்தினார். நமது ஆஸ்தான பாடகர் அருமைத் தோழர் . ஷாகுல் ஹமிது அவர்கள் ஒரு சிறப்பான துவக்க படலை பாடினார்.தோழர்.எ. நெடுஞ்செழியன், மாவட்ட உதவிச் செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் சாத்தாவு நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார். பாராட்டு விழா மலரை நமது அகில இந்திய உதவிச் செயலர் தோழர் எஸ். செல்லப்பா அவர்கள் வெளியிட , மாநிலச் செயலர் தோழர்.எ . பாபு ராதா கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, நமது அகில இந்திய உதவிச் செயலர் தோழர் எஸ். செல்லப்பா, நமது தமிழ் மாநில செயலர் தோழர்.எ. பாபு ராதாகிருஷ்ணன் , நமது மதுரை தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் திருமதி.S.E.ராஜம்ITS, சட்டமன்ற உறுப்பினர் தோழர்.ஆர். அண்ணாதுரை, ஆர்.விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்ட செயலர் CPI(M), முன்னாள் SZIEF துணைத் தலைவர் இ .எம். ஜோசப் ஆகியோர் பாராட்டு உரை நிகழ்த்தி னார்கள்.
AIBSNLEA சங்கம் சார்பாக மாநிலச் செயலர் தோழர். சிவக்குமார், SNATTA சங்கம் சார்பாக மாநிலச் செயலர் தோழர். அழகு பாண்டிய ராஜா, TNTCWU சங்கம் சார்பாக மாநிலச் செயலர் தோழர். வினோத் குமார், WRU சங்கம் சார்பாக மாநிலச் செயலர் தோழர் .பாஸ்கரன் ஆகியோரும், BSNLEU மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா, BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர்.பி. சந்திர சேகர், AIBSNLEA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர்.சீனிவாசன், SNEA சங்கம் சார்பாக மாவட்டசெயலர்,தோழர். தெய்வேந்திரன், TNTCWU சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் .சோனை முத்து , TEPU சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர்.முருகன், TSOA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் பாலகுமார், SEWA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் கந்தசாமி, AIBSNLOA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் முருகன் AIIEA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் ரமேஷ் கண்ணன், TNGEA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் கிருஷ்ணன், CITU சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் தெய்வராஜ், MUTA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் செந்தாமரை கண்ணன், TANSAC சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் பன்னீர் செல்வம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பாக தோழர் சாந்தாராம் ஆகியோர் வாழத்துரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியனுக்கு நிர்வாகம் தொடுத்துள்ள பழிவாங்கல் நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்யும் முகத்தான், மாவட்ட உதவிச் செயலர் தோழர்.ஆர். ரவிச்சந்திரன் முன்னணித் தோழர்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்து, நல நிதியாக ரூ.1,36,000- நமது மாவட்ட செயலர் எஸ். சூரியன் துணைவியார் எஸ். தமிழ் செல்வி வசம் மேடையில் வழங்கினார். தோழர்.எஸ். சூரியன் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர் எஸ். மாயாண்டி இனிதே விழா நிறைவுற்றது.
No comments:
Post a Comment