Tuesday 13 August 2013

2013-அனுஆயுதத்திற்கு எதிரான சர்வதேச மாநாடு .....

ஜப்பானில் நடைபெற்ற அணு ஆயுதத்திற்கு  எதிரான சர்வதேச மாநாடு -2013 

ஜப்பானில் நமது G.S தோழர் P .அபிமன்யு  அவர்கள் 


சர்வதேச  மாநாட்டில் தலைமை குழுவில் நமது பொதுச்செயலர் 
அருமைத்தோழர்களே!
ஜப்பான்  நாட்டில் உள்ள ஹிரோசிமா -நாகசாகியில் ஆகஸ்ட் 3 முதல் 9-ம் தேதி வரை  அணு ஆயுதத்திற்கு  எதிரான  மாநாடு  நடைபெற்றது . இம்மாநாட்டில் ஜப்பானில்  உள்ள  "அணி திரட்டப்படாத கமிட்டி" நாடு தழுவிய இணைப்புக்குழு சார்பாக  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இம்மாநாட்டில்  நமது பொதுச்செயலர்  தோழர் P. அபிமன்யு  சார்பாளராக கலந்து கொண்டார். ஜப்பான் மக்கள் இம்மாநாட்டில் அளவு கடந்த ஈடுபாட்டை கொண்டு இருந்தனர். மிகச்சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர் .

இம்மாநாட்டில் 20 நாடுகளில் இருந்து  220 சார்பாளர்கள்  கலந்து கொண்டனர் ஜப்பான் உட்பட இந்தியா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன்  ஆகிய நாடுகள் பங்கேற்றன .

சில அரசு பிரதிநிதிகளின்  அம்பாசிடர் உட்பட  நார்வே, கஜகஸ்த்தான் நாடுகளில் இருந்து கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். UN பொதுச்செயலர் பான் கீ மூன்  மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

07.08.2013 அன்று நடை பெற்ற சர்வதேச மாநாட்டில் தலைமைக்குழுவில் இருந்த 4 பேர்களில் நமது பொதுச்செயலர்  தோழர். P. அபிமன்யு அவர்களும் ஒருவர். இந்த சர்வதேச மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் "WORKSHOP" நடைபெற்றது .

நமது பொதுச்செயலர் தோழர். P. அபிமன்யு அவர்கள்  2 "WORKSHOP"களில், அதாவது 05.08.2013 அன்று நடைபெற்றதிலும், 08.08.2013 அன்று நடைபெற்ற  விவாதத்திலும் உரை ஆற்றினார்.

06.08.2013 அன்று ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா...68 ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கனக்கான மக்கள் "ஆட்டோ பாம் " வெடிக்கப்பட்ட இடம் அதுவாகும். ஒன்றும் அறியாத 1,40,000 மக்கள் கொல்லப்பட்டதற்காக 08.15க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மாநாட்டு சார்பாளர்கள் "ZERO மைதானத்தை" 06.08.2013 முதல் 09.08.2013 வரை பார்வை இட்டனர்  "ஆட்டோ பாம் " வெடித்ததில் மடிந்து போன "ஹீரோசிமா -நாகசாகி" மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இம்மாநாட்டின் சார்பாக நாகசாகியில் அணு ஆயுதத்திற்கு எதிராக ஜப்பான் மக்களிடமிருந்து பெறப்பட்ட 30,38,723 கையொப்பம் சமர்ப்பிக்கப்பட்டது .இம் மாநாடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது, அணு ஆயுதத்திற்கு எதிராக. அதேநேரத்தில் உலக அமைதி வேண்டியும், நல்ல வாழ்க்கையும், வேலைவாய்ப்பிற்க்கும், மக்கள் நலம், சுதந்திரம், மற்றும்  ஜனநாயகம், மனிதஉரிமைபாதுகாப்பு, தேவை என்றும், சமூக நீதிக்காக உறுதிமொழி ஏற்றது மாநாடு.

    -என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன்... மாவட்டசெயலர்-              

No comments: