Tuesday 13 August 2013

`கோல் இந்தியா`வில் பங்கு விற்பனைக்கு எதிராக வேலை நிறுத்த அறிவிப்பு . .

செப்டம்பர் 19 முதல் 21 வரை கோல் இந்தியாவில் 

வேலை நிறுத்தம்  . . .




பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவில் உள்ள ஊழியர் சங்கங்கள் அரசின் தனியார்மைய கொள்கைக்குக் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கொடுத்து உள்ளது. கோல் இந்தியாவில் உள்ள எல்லா தொழிற்சங்கங்களும் செப்டம்பர் 19 முதல் 21 வரை வேலை நிறுத்தத்திற்கு ஏற்று கொண்டுள்ளது என்று ALL INDIA COAL WORKERS FERDERATION OF INDIA (AICWUF)ன்  பொதுசெயலர் ஜீவன்ராய் Business Line பத்திரிகையில் தெரிவித்துள்ளார். 

கோல் இந்தியாவில் உள்ள 5 முன்னணி சங்கங்களில் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதாவது INTUC, HMS, BMS, AICWF & AITUC இதில்  INTUC தவிர மற்ற எல்லா சங்கங்களும் பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது.  INTUC சங்கம் மற்றும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான முடிவை கூடிய விரைவில் அறிவிக்கும். இந்த கோல் இந்தியாவின் பங்கு விற்பனை மூலம் இந்தியாவில் உள்ள 35 மாவட்டங்களில் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படைவார்கள். கொல்கத்தாவில் இதற்கென நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டபின் மத்திய அமைச்சர் (நிலக்கரி) திரு. ஸ்ரீப்ரகாஷ்  ஜெய்ஸ்வால் தொழிற்சங்கங்கள் 5 சத பங்கு விற்பனைக்கு ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் மத்தியஅ ரசு உள்ளது என தெரிவித்தார். 

கோல் இந்தியாவில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் மட்டும் மகா ரத்தினா சுரங்கங்களுக்கு 10 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி பாதிக்கும்.  கோல் இந்தியா நிறுவனங்களில் சுமார் 3.5 லட்சம் நிரந்தர தொழிலாளர்களும், 2 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணி புரிந்து கொண்டிருக்கின்றனர். சுரங்க தொழிலில் உள்ள 70 முதல் 80 சத தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வார்கள் என்று அகில இந்திய நிலக்கரி தொழிலாளர்களின் கூட்டமைப்பு (AICWUF) கூறி உள்ளது. கோல் இந்தியா பங்கு விற்பனை 10 சதத்திலிருந்து 5 சதத்திற்கு குறைத்து கொள்வது என்ற அரசு தரப்பு ஆலோசனையை கடந்த வாரத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் கோல் இந்தியா தொழிலாளர்கள் ஏற்று கொள்ள வில்லை. 

கோல் இந்தியாவின் 10 சத  பங்கு விற்பனையின் மூலம் மத்திய அரசு 20 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு செய்து இருந்தது. பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை இந்த நிதியாண்டில் திரட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில் இந்த கோல் இந்தியா பங்கு விற்பனை முக்கியமான ஒன்று என்று அரசு கருதுகிகிறது. அதே நேரத்தில் பங்கு விற்பனை எதிர்ப்பு மூலம் தொழிலாளர்கள் கோல் இந்தியா நிறுவனத்தின் கட்டமைப்பை பாதுகாப்பதோடு, தனியார் கம்பெனிகள்  பொதுத்துறை நிறுவனைங்களை கபளீகரம் செய்வதை தடுக்கவும் முடியும் என நம்புகிறார்கள். 

கோல் இந்தியா ஊழியர்களின் பொதுத்துறையை பாதுகாக்கும் போராட்டம்  வெற்றிபெற வர்க்க நோக்கோடு வாழ்த்துகிறோம்.

தோழமையுடன் . . . எஸ். சூரியன் . . . மாவட்ட செயலர் -

No comments: