26.08.2013
அன்றுடெல்லியில் நடைபெற்ற நமது BSNLEU, மத்திய செயலக கூட்டம் ஊழியர்களின் நீண்டநாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் தீர்வதற்கு,நாம் ஏற்கனவே இரண்டு கட்ட போராட்டமாக ,ஆர்ப்பாட்டம் மற்றும் மூன்று நாட்கள் தர்ணா நடத்திமுடித்துள்ள சூழ்நிலையில்அடுத்த கட்டமாக ஒரு நாள் வேலை நிறுத்தம் 27.09.2013 அன்று நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளது . இந்த வேலைநிறுத்தம் அறிவிப்பு விரைவில் நிர்வாகத்திற்கு வழங்கப்படும். அனைத்து மாநில மற்றும் மாவட்ட செயலாளர்கள் வேலைநிறுத்தம் வெற்றி பெற தீவிர அணிதிரட்டல் செய்ய வேண்டும் என மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது .
நமது கோரிக்கைகள் தீர்வதற்கு இப்போதிருந்தே முனைப்புடன் செயலாற்றுவோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
என்றும் தோழமையுடன்
எஸ். சூரியன் . . . மாவட்ட செயலர்
No comments:
Post a Comment