Saturday, 31 August 2013

பணி ஓய்வு சிறக்க தோழமை வாழ்த்துக்கள் . . . .

தோழர் S.ராமலிங்கம் ,மாவட்ட அமைப்புசெயலர் 
உளமார வாழ்த்துகிறோம்  . . . .

நமது மாவட்ட சங்கத்திற்கு எல்லாநேரமும் ,எந்த பணியாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் தொடர்ந்து ஒரு வாலிபனை போல் சுறுசுறுப்பாக கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் ,இலக்கா பணியாக இருந்தாலும் ,சங்க பணியாக இருந்தாலும் பம்பரமாக சூழன்று கொண்டு இருக்கும் அருமை தோழர் எஸ்.இராமலிங்கம் அனைவரின் பாராட்டுக்கு உரியவர் என்றால் அது மிகை ஆகாது .நமது தோழருடன் சேர்த்து 5பேர் இன்று பணி நிறைவு செய்கிறார்கள் ,அனைவரின் பணி ஓய்வு காலம்சிறக்க  மனதார , உளமார வாழ்த்துகிறோம்  . . . . 
நமது அருமை தோழர் எஸ்.இராமலிங்கம் ,அவர்களுக்கு மதுரை மாவட்ட சங்கம் எதிர்வரும் 03.09.13 அன்று ,திருமங்கலத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளது ,அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
. . . என்றும் தோழமையுடன் ---எஸ்.சூரியன் ,மாவட்ட செயலர் .

No comments: