Saturday, 10 August 2013

மத்திய தொழிற்சங்கம் நடத்திய கருத்தரங்கம்


டெல்லியில் அனைத்து சங்கங்கள் சார்பாக கருத்தரங்கம் 



டெல்லி கருத்தரங்கில்  தோழர் .தபன் சென் CITU உரை நிகழ்துகிறார்

ஆகஸ்ட்  6-ம்  தேதி  டெல்லி  மாவ்லங்கர்  ஹாலில் நடந்த   அகில இந்திய  அளவிலான  கருத்தரங்கம்  அனைத்து  மத்திய  தொழிற்சங்கங்கள்  சார்பாக  நடைபெற்றது. இக் கருத்தரங்கத்தில், மத்திய  அரசின்  கொள்கையில்  மாற்றம்  உருவாக்கிட  போராடுவது  என்று  அனைத்து சங்கங்கங்கள்  சார்பாக  முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.  

கருத்தரங்கத்தில் 2 கட்ட போராட்ட திட்டங்கள் முடிவு செய்யபட்டுள்ளன. அம்முடிவுகளை அனைத்து சங்கங்களும்  சிரமேற்கொண்டு அமுல் படுத்திட வேண்டும் . இக் கருத்தரங்கில்  . . . . . தோழர் . தபன்சென்-CITU, தோழர் B.N.ராய் -BMS, தோழர் K.K. நாயர்-INTUC,தோழர் குருதாஸ் குப்தா -AITUC, தோழர். ஹர்பஜன்சிங்-HMS, தோழர். திவாரி-TUTC, தோழர். லதாபஹன், தோழர். ராஜீவ் திவாரி-AICCTU, தோழர். அசோக் கோஷ் -UTUC, தோழர். பச்சைமுத்து -LPF. ஆகியோர்  கலந்து கொண்டனர் .
போராட்ட திட்டம் 

25.09.2013 - மாவட்ட,/மாநில தலை நகரங்களில் -ஆர்ப்பாட்டம் /தர்ணா
12.12.2013 - டெல்லி பாராளு மன்றம்  நோக்கி பேரணி 
  • பொதுத்துறை பங்கு விற்பனைக்கு எதிராக ... 
  • குறைந்தபட்ச கூலிக்காக ....
  • அவுட் சோர்சிங்  முறைக்கு எதிராக .....
  • துறைவாரி கோரிக்கைக்காக .....
நமது BSNL பொதுத்துறையை  பாதுகாக்க நடக்கவிருக்கும் போராட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்போம்.... இக்கூட்டத்தில் நமது  சங்கத்தின் சார்பாக தோழர் VAN. நம்பூதிரி, தோழர். அனிமேஷ் மித்ரா DY.GS, தோழர். S.C. பட்டாச்சாரிசி ஆகியோர்  கலந்து கொண்டனர் .

என்றும் தோழமையுடன் -  எஸ்.சூரியன் ....மாவட்டசெயலர்  

No comments: