Thursday, 19 September 2013

எச்சரிக்கை . . .

அமெ. நிர்ப்பந்தத்திற்கு அடிபணியக் கூடாது
அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்திற்குமன்மோகன்சிங் அரசாங்கமானது அணு விபத்து பொறுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய விதத்தில், சட்டத்தில் உள்ள பொறுப்பு தொடர்பான பிரிவிலிருந்து அணு உலைகளை விநியோகம் செய்திடும் அமெரிக்க கம்பெனிகளுக்கு விலக்கு அளித்திட முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இது நாடாளுமன்றத் தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, மேற்கொள்ளக்கூடிய சட்டவிரோதமான முயற்சியாகும். இது தொடர்பாக அட்டார்னி ஜெனரல் அளித்துள்ள கருத்து ஏற்கத்தக்கது அல்ல. மேற்படி சட்டத்தின் 17() பிரிவின் கீழ்கூட, அணுஉலை விநியோகித்தவர் ஒப்பந்தத் தின் அடிப்படையில் அடைக்கலம் நாடிட முடியாது, தவறான பொருளை அளித்தன்மூலம் விபத்து ஏற்பட்டால் மேற்படி சட்டம் 19() பிரிவின் கீழ் மட்டுமே அடைக்கலம் அளித்திட முடியும்.
எனவே, ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருந்த போதிலும், அடைக்கலம் தேடுவதற்கான உரிமை அல்லது விநியோகஸ்தரின் பொறுப்பு என்பது அளிக்கப்பட்ட உபகரணத்தில் ஏதேனும் பிழை இருக்குமென்றால் மட்டுமே பிரயோகிக்க முடியும். ஐமுகூ அரசாங்கமானது அமெரிக்க அரசு தங்க ளுடைய கம்பெனிகளுடைய நலன்களைப் பாதுகாப் பதற்காக அளிக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருப்பது இதிலிருந்து நன்கு தெரிகிறது. ஆனால், இது நாட்டின், நாட்டு மக்களின் நலன்களைக் காவு கொடுப்பதாக அமைவதை ஏற்க முடியாது. (ஐஎன்என்)

No comments: