Sunday, 22 September 2013

பாராட்டுகிறோம்... வாழ்த்துகிறோம்....

BSNL சஞ்சார் சேவா பதக்கம்-2013

தோழர்களே! இந்த ஆண்டிற்கான “சஞ்சார் சேவா”  பதக்கப் பட்டியலில் மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் திரு I.T.மூர்த்தி, DGM-TR அவர்கள்  பரிசு பெற்றுள்ளதை நமது  BSNLEU மதுரை மாவட்டச் சங்கத்தின் சார்பாக மனம் நிறைந்த மகிழ்வோடு வாழ்த்தினையும்  தெரிவித்துக் கொள்கிறோம். 
திரு I.T, மூர்த்தி அவர்கள். பணியில் நேர்மை, பழக்கத்தில் இனிமை, கர்வமின்மை ஆனால் அன்பு கலந்த கண்டிப்பு , முக்கிய முடிவுகள் எடுப்பதில் சக ஊழியர்கள், மற்றும்  அதிகாரிகளை அழைத்து   கலந்து ஆலோசிப்பது, BSNL நலனில் முழுக்கவனம் செலுத்துவது, தொழிற்சங்கத்தின் மீது ஈடுபாடு போன்ற எல்லாத் துறைகளிலும்  சிறந்து விளங்குபவர். திரு. I.T, மூர்த்தி. அவர்களுக்கு  சஞ்சார் சேவா பதக்கம் கொடுக்கப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இத்தருணத்தில் திரு. I.T,மூர்த்தி, DGM-TR அவர்களோடு தமிழகம் முழுவதும் இணைந்து பரிசு பெறும் மற்ற 15 தோழர்களையும்  BSNLEU  மதுரை மாவட்டச் சங்கம் பாராட்டுகிறது.
விருது பெறும் ஊழியர்கள் 
1. B. மோகன் - TM - நீலகிரி 
2. M. எழுமலை - ஓட்டுனர் - வேலூர் 
3. R. நடேசன்ஓட்டுனர் - சென்னை 
4. S. சதீஷ் சந்திரகுமார் - SR. TOA - நாகர்கோவில் 
5. G. இராஜலட்சுமி - STENO - சேலம் 
6. T. தணிகைவேலு - SS(O) - சென்னை 
7. M. முத்தரசு - TTA - கும்பகோணம் 
8. P. நீலமணி - TTA - கோவை 
9. S. அருண் வினுசங்கர் - TTA - திருச்சி 
10.A. அப்துல் நசீர் - RM - திருச்சி 
11.செய்யது மொய்னுதீன் - GR D  - சென்னை 
விருது பெறும் அதிகாரிகள் 
1. K. சரவணபவன் - SDE - பாண்டிச்சேரி 
2. R. மேக்ஸ்வெல் ஜெகநாதன் - SDE - திருநெல்வேலி 
3. R. இராஜாராமன் - SDE - சென்னை 
4. I.T . மூர்த்தி - DGM - மதுரை
5. K. இராஜாமணி - AGM - சென்னை 

No comments: