இந்தியாவில் சமூக மாற் றத்திற்கு வித்திட்டவர் மறைந்த தலைவர் ஜோதி பாசு
இந்திய தொழிலாளர் வர்கத்தின் மகத்தான தலைவராக இருந்து மறைந்த மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் தோழர் ஜோதிபாசுவின் நூற்றாண்டு துவக்கவிழா இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. சிஐடியு சார்பில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில்அ. சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார்.
எங்கெல்லாம் சாதாரண மக்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் போராடி வரலாறு படைத்துள்ளனர். அந்த வரிசையில்தான் மக்கள் நலனை காப்பதில் வரலாறு படைத்தவர் ஜோதிபாசு. மேற்கு வங்க மாநிலத்தில் 23 ஆண்டு காலமாக முதலமைச்சராக இருந்த போதிலும், ஊழல் கரைப்படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் அவர். படிப்புக் காலம், இளைமை காலம் போக தனது 80 ஆண்டு கால அரசியலில் அப்பழுக்கற்றவராக திகழ்ந்தவர் ஜோதிபாசு.நிலவிநியோகம் இல்லாமல் எந்த நாடும் முன்னேற முடியாது என உலகின் மூலைமுடுக்குகளிலும், முழக்கமிட்டு வருகிறோம். அதை இந்தியாவில் அமல் படுத்திக் காட்டி சாதனை படைத்தவர் தோழர் .ஜோதி பாசு.
ஆனால், தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது நிலச் சீர்திருத்தம் கொண்டுவரப் பட்டது. அதை, உச்சவரம்பா அல்லது மிச்சவரம்பா என்று அண்ணாவும், கலைஞரும் கிண்டல் செய்தனர். பண்ணை தோட்டம் என பினாமிகள் பெயரில் எழுதிக்கொண்டனர். இதனால், தமிழ்நாட்டில் இன்னமும் நிலக் குவியல்கள் நீடிக்கி றது என்றார்.
---தீக்கதிர்
No comments:
Post a Comment