நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு தேசிய விருதை இந்திய விலை கணக்கீட்டாளர் நிலையம் வழங்கியுள்ளது.கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய விலை கணக்கீட்டாளர் நிலையம் எனப்படும் இன்ஸ்டிட்டியூட் ஆப் காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் அமைப்பு, நிதித் துறையை சிறப்பாக நிர்வகித்து வரும் நிறுவனங்களைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் சிறப்பு விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2012ம் ஆண்டில் சிறப்பாக செயல் பட்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி. காரே தலைமையில் அமைக்கப் பட்ட நடுவர் குழு, உற்பத்தித் துறையில் உள்ள மிகப்பெரிய பொது த் துறை நிறுவனங்கள் பிரிவின் கீழ், என்.எல்.சி. நிறுவனத்தை தேசிய விருது பெற தேர்ந்தெடுத்துள்ளது.இதுதொடர்பாக புதுடில்லி, விஞ்ஞான் பவனில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கலந்து கொண்டு இந்த விருதை வழங்கினார். அதை என்எல்சி நிறு வனத்தின் தில்லி மண்டல மேலாளர் பெற்றுக் கொண் டார்.
இந்நிகழ்ச்சியின்போது, இந்திய விலை கணக் கீட்டாளர் நிலையத்தின் தலைவர் சுரேஷ் சந்திர மொகந்தி உடனிருந்தார்.பின்னர் என்எல்சி நிறுவன சென்னை மண்டல அலு வலகத்தில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவ்விருதை நிதித் துறை இயக்குநர் ராகேஷ் குமார், நிறுவன அதிபர் சுரேந்தர் மோகனிடம் வழங்கினார்
No comments:
Post a Comment