Thursday 5 September 2013

எதிர்ப்பையும் மீறி புதிய பென்சன் மசோதா . . .

இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி - ஊழியர்விரோத பென்சன்மசோதா நிறைவேறியது
இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய பென்சன் மசோதாவை மன்மோகன்சிங் அரசு புதனன்று மக்களவையில் நிறைவேற்றியது. இதன் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்திற்குப் பதிலாக ஊழியர்களின் ஓய்வூதியத்தொகை பங்குச்சந்தையில் முதலீடுசெய்து சூறையாடவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று தொழிலாளர்களும் ஊழியர்களும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வந்த நிலையில்இந்த ஊழியர்விரோத மசோதா நிறைவேற்றப்பட் டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2005ம் ஆண்டிலிருந்தே இம்மசோ தாவை நிறைவேற்ற அரசு துடித்தது.
2005ம் ஆண்டில் மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த மசோதா 2011ம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டது.இந்தமசோதா ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு சட்டரீதியான அதிகாரங்களை அளிக்க வகை செய்கிறது. 2003ம் ஆண்டு இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இது இடைக்கால ஆணையம்தான் என்றும் பிறகு சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்படும் என்றும் அப்போதைய பாஜக அரசு கூறியது.
ஆனால் நிர்வாக உத்தரவு மூலம் 2004ம் ஆண்டு முதல் இந்தஆணையம் செயல் படுத்தப்பட்டு வந்தது. இந்தமசோதாவில் நாடாளுமன்ற நிலைக்குழு சிலமுக்கிய திருத்தங்களை கொடுத்திருந்தது. இந்தசட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளதன் மூலம் ஓய்வூதிய நிதிநிறு வனங்களிலும் அந்நிய மூலதனம் 49 சதவிதம் அளவுக்கு அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஓய்வூதிய நிதியில் முற்றாக அந்நியரை அனுமதிக்கவும் மன் மோகன்சிங் அரசு திட்ட மிட்டுள்ளது.
இம்மசோதாவை நிறை வேற்றுவதில் மன்மோகன்சிங் அரசு குறியாக இருந்த நிலையில்புதனன்று நாடாளுமன்றத்தில் நிலக்கரி பங்குகள் தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரம் வெடித்தது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. மத்திய நிதியமைச்சர் .சிதம்பரத்தால் இம்மசோதா அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிஉள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள்திமுகதிரிணாமுல் காங்கிரஸ்சமாஜ்வாதிக் கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பங்குச்சந்தையில் ஓய்வூதிய நிதியை முதலீடு செய்வது மற்றும் அந்நியரை அனுமதிப்பதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். அவையில் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் அவசர அவசரமாக இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். விவாதத்திற்கு பதிலளித்துப்பேசிய .சிதம்பரம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பெரும்பாலான திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறினார்.

No comments: