Monday 24 March 2014

23.03.14 கடல் அலை போல் திரண்ட கூட்டம் . . .

 அருமைத் தோழர்களே!அனைவருக்கும் வணக்கம் . . . நமது BSNLEU மாவட்டசங்கம் முடிவுப்படி, மகளீர் தினம், BSNLEU அமைப்பு தினம், பகத்சிங் தினம் ஆகிய மூன்று நிகழ்ச்சி களையும் நடத்த திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 23.03.14 காலை 9.30 மணிக்கு CSC கிளைச் சங்கம்  செய்திருந்த அற்புத  ஏற்பாடு அனைவரையும் நெகிழ்ச்சி பெற செய்தது.சங்கத்தின் ஓங்கி உயர்ந்த கொடிக்கம்பம், அழகான  கல்வெட்டு,சுவையான SKC,இவற்றோடு மாவட்ட உதவிச் செயலர் தோழர்.R. ரவிச்சந்திரன் அவர்களின் கம்பீரமான கொடி ஏற்றத்திற்கிடையே மாவட்ட செயலர் எஸ்.சூரியன் கல்வெட்டை திறந்து வைக்க,நிகழ்ச்சிக்கு தோழர். C.தனபால் தலைமை ஏற்க்க,மாவட்ட தலைவர் தோழர்.சி.செல்வின் சத்திய ராஜ் முன்னிலை வகுத்தார். கிளைச் செயலர் தோழர்.எஸ்.சத்தாவு கருத்துரை கொண்ட வரவேற்புரையை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து G.M அலுவலகத்தின் முன்  நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச் சியை  மாவட்ட உதவிபொருளர் தோழியர்.S.M.புஷ்பராணி  செய்ய, மாவட்ட செயலர் எஸ்.சூரியன் கல்வெட்டை திறந்து வைக்க,மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ்.ஜான் போர்ஜியா வாழ்த்துரை வழங்க,கிளைச் செயலர் தோழியர். N.ஈஸ்வரி வரவேற்று நன்றி உரை நிகழ்த்தினார்.
கடல் அலையை திரண்ட கூட்டம் 
அதன்பின் G.M அலுவலக TRC-யில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு மாவட்ட தலைவர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உதவிச் செயலர் தோழர்.எஸ்.ஜான் போர்ஜியா வரவேற்புரை நிகழ்த் தினார். சர்வதேச பெண்கள் தினம் குறித்து தோழியர்.விஜயாAIIEA அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.சங்கப் பணியில் சரிபாதி நாங்களும் இருக்கிறோம் என்பதை நிருபித்த 80-க்கும் மேற்பட்ட பெண்களீன் பங்கேற்பு. மனமகிழ் மன்றத்தில் அமர இடமில் லாமல் நிரம்பி வழிந்த கூட்டத்திற்கிடையே,இடது சாரி கட்சிகளின் சார்பாக முன் நிறுத்தப் பட்டுள்ள மதுரை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் தோழர்.பா.விக்ரமன் அவர்களின் எழுச்சி உரை. மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் அன்பு வேண்டு கோளை ஏற்று அரை மணிநேரத்திற்குள் 52,515 ரூபாய் நிதியாக அரங்கத்திற்குள் அள்ளித்தந்த தோழர்,தோழியர்களின் உற்சாகத்தின் வெளிப்பாடாய் தோழர்.R.ரவிச்சந்திரன் ADS ஆனந்தமாய் நிதியை தோழர்.பா.விக்ரமனிடம் வழங்க,தோழர்.S.சாத்தாவு நினைவு பரிசு வழங்கினார். தோழர்கள் N.சோனைமுத்து D/S-TNTCWU, ஆர்.சுப்புராஜ் B/S-TMM, எஸ்.சூரியன் ஆகியோர் பொன்னாடை போர்த்தினர்.நிகழ்ச்சி மேலும் சிறக்கும் வண்ணம் BSNL கலைவாணர்.தோழர்.சாகுல் எழுச்சி பாடல்களை பாடி மகிழ்வித்தார்.
BSNL சேவை கருத்தரங்கம் 
அனைத்து சங்கங்கள் சார்பாக கருத்தரங்கத்தில் தோழர்கள், சுந்தரம் -SEWA, முருகேசன் -NFTE, சந்திரசேகர்-SNEA, கருப்பையா-AIBSNLEA, சோனைமுத்து-TNTCWU ஆகியோரும்,நிர்வாகத்தின் சார்பாக திரு.ஜேவியர் DGM(HR) அவர்களும் நல்ல பல கருத்துரையை வழங்கினர்.இறுதியாக மாவட்ட பொருளர் தோழர்.எஸ்.மாயாண்டி நன்றிகூற முப்பெரும் விழா சீரும் சிறப்புமாக இனிதே  நிறைவுற்றது. 

No comments: