Wednesday 26 March 2014

செய்தி . . . துளிகள்! . . .

  • TTA ஆளெடுப்பு விதி TTA RECRUITMENT RULES நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்குப்பின்னர் BSNL  BOARD ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது
  • ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 2012ல்  JAO தேர்வெழுதி தோல்வியுற்ற பொதுப்பிரிவு OC தோழர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க இயலாது என BSNL நிர்வாகம் கைவிரித்துள்ளது. ஆயினும் புதிய  பாடத்திட்டத்தின் அடிப்படையில் விரைவில் JAO தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
  • JCM மாநில மற்றும் மாவட்ட குழுக்கள் அமைக்கும் போது அந்தந்த மாநிலமாவட்டம் சார்ந்த உறுப்பினர்களை வைத்து தான் அமைக்க வேண்டும் என BSNL நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது,
  •  2013-14ம் ஆண்டிற்கான இறுதிக்கட்ட சேமநல நிதி ஒதுக்கீடு FINAL WELFARE GRANT இன்று 20/03/2014 அறிவிக்கப்பட்டுள்ளதுமொத்தம்  ரூ.3,95,46,000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஇதில் தமிழகத்திற்கு 37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2014-2015 ஆண்டை "செல்பேசி சேவை மேம்பாட்டு ஆண்டாக(“Improved Quality of Mobile services”) BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஒப்பந்த ஊழியர்  -  விலைவாசிப்படி VDA உயர்வு 

ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி  VDA ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் & அக்டோபர் மாதங்களில் உயரும் அதன் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 2014 முதல் VDA உயர்ந்துள்ளது.இவ் விலைவாசிப்படி உயர்வு 01/04/2014ல் இருந்து UNSKILLED ஊழியர்களுக்கு  அமுலுக்கு வரும்.
                                                                              A பிரிவு நகரத்தில்  ரூ.329/=
B பிரிவு நகரத்தில்   ரூ.273/=
C பிரிவு நகரத்தில்  ரூ.220/=
                                                           தோழமை வாழ்த்துக்களுடன் ....எஸ். சூரியன் ---D/S-BSNLEU

No comments: