Thursday 27 March 2014

குஜராத் வளர்ச்சி ஒரு மாரீச மான் . . .

நரேந்திர மோடி பாஜகவின் பிரதம வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்கள் அனைத்தும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக அமர்ந்து விட்டால் இந்தியாவும் குஜராத் போல் பார்ப்பவர்கள் கண்ணைக் கூசவைக்கும் வகையில் பிரகாசமாக ஜொலிக்கும் என்று துதி பாட ஆரம்பித்தன. வலதுசாரி முதலாளிகளின் ஊடகங்களுடன், தங்களை நடுநிலையாளர்களாக அறிவித்துக் கொள்ளும் ஊடகங்களும் நமோ பஜனையை பாடாத நாளே இல்லை என்று கூறலாம்.
இவை புகழ்கின்ற குஜராத்தில் மக்கள் சந்தித்து வருகின்ற பிரச்சனைகள் குறித்தும், அங்கு வளர்ந்து வரும் செல்வந்தர்களின் பணக்குவியலும், அம்பானி, அத்வானி போன்றவர்களுக்கு அரசு அளித்து வரும் சலுகைகளும், சாதாரண மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளும், பொது விநியோகமும், சுகாதாரமும் பற்றி இவர்களுக்கு தெரியாதா? இவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாகக் கூட தெரிந்திருக்கும்.ஆனால் அவைகளை வெளியில் சொல்ல வேண்டிய கட்டாயம் இவைகளுக்கு இல்லை. இவையெல்லாம் தாங்கள் விரும்பும் நபர் தலைவராக வருவதற்கு எதிரான காரணிகள் என்பதால் அவற்றை மூடி மறைக்கின்றன.மோடி 2001 அக்டோபர் முதல் குஜராத் முதல்வராக இருந்து வருகிறார்.
கடந்த 13 ஆண்டுகளில் குஜராத்தில் 9829 தொழிலாளர்கள், 5447 விவசாயிகள், 919 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மோடியின் ஆட்சியில் விவசாயம் தனது முன்னுரிமையை இழந்துள்ளது. சுமார்4 லட்சம் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உள்ள கிணறுகளுக்கு மோட்டார் பம்புகளை இயக்க மின் இணைப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர்.கிராமப்புறப்பகுதிகளில் நாளொன்றுக்கு ரூ.11க்கு மேல் சம்பாதிக்கும் நபரையும், நகர்ப்புறங்களில் ரூ.17க்குமேல் சம்பாதிக்கும் நபரையும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்று கருத முடியாது என்று குஜராத் அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் சுற்றறிக்கை கூறியுள்ளது. இந்த சுற்றறிக்கை அரசின் இணையதளத்தில் காணமுடியாது.அரசு அலுவலகங்களின் அதிகாரிகளின் பாதுகாப்பில் இது பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய திட்டக்குழு 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண மனுவில் கிராமப்புறத்தில் ரூ.26ம் நகர்ப்புறத்தில் ரூ.32ம் வறுமைக்கோட்டு அளவாக நிர்ணயிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.அதை எதிர்த்து பாஜகவும், நரேந்திர மோடியும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தனர். ஆனால் தாங்கள் ஆளும் மாநிலங்களின் நிலைமையை மூடி மறைத்து விட்டார்கள்.கடந்த 13 ஆண்டுகளில் குஜராத் அரசின் கடன்கள் அதிகரித்துள்ளன. இந்திய மாநிலங்களின் கடன் பட்டியலில் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 2008-09ம் ஆண்டில் அதன்கடன் 87 ஆயிரத்து பத்து கோடி, 2009-10ம் ஆண்டில் அதன் கடன் 98ஆயிரத்து 528 கோடி, 2010-11ல் அதன் கடன் 1லட்சத்து12 ஆயிரத்து 462 கோடி இருந்தது. இதுதற்போது 1.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சுமார் 450 லட்சம் கோடி டாலர்கள் மதிப்புடைய அந்நிய நேரடி முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக 2011ம் ஆண்டில் நடந்ததுடிக்கும் குஜராத்உச்சி மாநாட்டில் மோடி கூறியுள்ளார். ஆனால் இன்றுவரை இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நியநேரடி முதலீடுகளின் மொத்த மதிப்பு 290லட்சம் கோடிகள் மட்டுமே.
குஜராத் மாநிலம், 2011-12 சமூக பொருளாதார ஆய்வுஅறிக்கையின்படி 2011ம் ஆண்டில் சுமார் 20 லட்சம் கோடிகளுக்கு மேலான அந்நிய முதலீடு உறுதிமொழிகள் பெறப்பட்டதில் வெறும் 29 ஆயிரத்து 813 கோடி ரூபாய்கள் மட்டுமே முதலீடாக வந்துள்ளது. அதேபோல் சுமார் 8300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதில் 250 மட்டுமே நிறைவேறியுள்ளது. அந்நிய முதலீடு பற்றி மோடிபொய் சொல்லி வருகிறார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வரலாறு பற்றி மட்டும் தவறாகக் கூறுவதில்லை. பொருளாதாரத்திலும் பொய் சொல்கிறார் என்பதே யதார்த்தம்.        நன்றி...தீக்கதிர் 

No comments: