Thursday 11 December 2014

11.12.14ஆரம்பித்து வைத்தார் தோழர்.ஆர்.அண்ணாதுரை MLA...

அன்பிற்கினியவர்களே ! நமது BSNL அரங்கில் உள்ள அதிகாரிகள்+ஊழியர் சங்கங் களின் அகில இந்திய கூட்டமைப்பு  FORUM முடிவின் அடிப்படையில், மதுரையில் "SAVE BSNL" 21 அம்ச கோரிக்கையை வலியுறித்தி  மக்கள் மத்தியில் கொண்டு சென்று இந்திய நாடு முழுமைக்கும் சுமார் 1 கோடி கையெழுத்தை பெற்று மாண்புமிகு, பிரதமரிடம் சமர்பிப்பது என்ற அறைகூவலை மதுரையில் சுமார் 1 லட்சம் கையெழுத்தை பெறுவது என்ற இலக்கோடு 11.12.14 ஆரம்பித்து வைத்தார் அருமைத்தோழர்.ஆர்.அண்ணாதுரை MLA...
டிசம்பர் 11-ம் நாள்  என்பது இந்தியாவின் தேச விடுதலைக்கு தனது வாழ்நாள் முழுவதும் அர்பணித்த,மகாகவி பாரதியின் பிறந்த நாள்+தபால்-தந்தி தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளி வர்க்கத்தின் போர்வாள், வங்கம் தந்த சிங்கம், தனது வாழ்நாள் இறுதிவரை வர்க்க சமரசமற்ற  போரை இடைவிடாது நடத்திய அருமைத் தோழர். கே.ஜி.போஸ் அவர்களின் நினைவுநாளாகும். நமதுBSNLநிறுவன பாதுகாப்பு என்ற தேசபக்த போராட்டத் திற்கு இந்நாளை தேர்ந்தெடுத்த நமது அகில இந்திய தலைமைக்குநமது  பாராட்டுக்கள் ...
நல்லதொரு  ஆரம்பமாக மக்கள் சந்திப்பு இயக்கமாக, மக்கள் பிரதிநிதி தோழர் ஆர். அண்ணாதுரை துவக்கிய கையெழுத்து துவக்க நிகழ்ச்சிக்கு நமது அரங்கத்தில் இருந்து அனைத்து சங்கங்களும் (BSNLEU+NFTE+SNEA+AIBSNLEA+TEPU+SNATTA) கலந்து கொண்டு ஈடு பட்டமை  குறித்து ஒரு நல்ல மன நிறைவை அனைவருக்கும் தந்தது. நமது கையெழுத்து இயக்கத்தை வாழ்த்துவதற்கு தோழமை  பொதுத்துறை நிறுவனமான LICயிலிருந்து AIIEAசங்கத்தின் தோழர்கள் வந்து பங்குபெற்றது என்பது நமக்கு உற்சாகத்தை ஊட்டியது.
கையெழுத்து இயக்கம் துவங்கிய ஒரே நாளில் சில மணி நேரத்தில் நமது தோழர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, பம்பரமாக சுழன்று கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் கையெழுத்துக்களை பெற்றது என்பதும், நிகழ்ச்சி நடக்கும் போதே பொது மக்கள் தானாக முன்வந்து கையெழுத்திட்ட விதம் கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. இது காறும் தேச நலனுக்கு எதிராக எத்தனையோ அரசுகள் முயற்சித்த  போதெல்லாம், மக்கள் முன்வந்து தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்து நின்று தேச பாதுகாப்பு தேரை வடம்பிடித்து இழுத்திருக்கிறார்கள்  என்பது தான் வரலாற்று பதிவாகும்.
நன்றி சொல்கின்றோம், நமது அழைப்பை ஏற்று 
நாம் நடத்திய தேச பக்த போராட்டமான 
நமது BSNLதுறை பாதுகாப்பு 
போராட்டமான -கையெழுத்து இயக்கத்தை 
துவக்கிவைத்து பெருமை சேர்த்த 
மக்கள் பிரதிநிதி அருமைத் தோழர் 
ஆர். அண்ணாதுரை MLAஅவர்களுக்கும்,
கையெழுத்திட்ட பொதுமக்களுக்கும்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்(AIIEA)சங்க நிர்வாகிகளுக்கும்
கலந்து கொண்ட அனைவருக்கும் 
நமது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
 இது . . . தொடக்கம் தான் !
  *  ஜனவரி -2015 தர்ணா 3 நாட்கள் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 
  *  பிப்ரவரி -2015 டெல்லி பாராளுமன்றம் நோக்கி பேரணி 25-ம் தேதி 
  *  2015- மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.
...போராட்ட வாழ்த்துக்களுடன் --என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

1 comment:

Ganesan , Dist vice President , Palani said...

தோழரே !
உங்கள் நிகழ்ச்சியில் நேரில் வந்தது கலந்தது கொண்டது போன்ற ஒரு உணர்வு தங்களது வலைப் பதிவைப் படித்த போது தோன்றியது !
மக்களின் ஆதரவை பெற ..நம் தோழர்கள் ஒரே நாளில் 1000 கையெழுத்து பெற்றது என்பது உண்மையிலேயே மிக்க மகிழ்வை தருகிறது !
வாழ்க இந்த போராட்டம் !
தோழர் . கணேசன் .மாவட்ட துணை தலைவர்.