Monday 29 December 2014

தேசவிரோத அவசர சட்டத்திற்கு எதிராக - ஆவேசம்.

அருமைத் தோழர்களே ! இந்திய நாட்டின் அதிமுக்கிய பொதுத்துறைகளில் ஒன்றான இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டை உயர்த்த வகைசெய்யும் படியான  மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசவிரோத அவசர சட்டத்திற்கு எதிராக மதுரை LICஅலுவலகத்தில்  100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கிட்டத்தட்ட பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆவேச ஆர்ப்பாட்டம்,இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டை உயர்த்த வகைசெய்யும் படியான  மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை உடனடியாக கைவிடு என்ற கோரிக்கையோடு, மிக  மிக சக்திமிக்க ஆர்பாட்டம் நடைபெற்றது .

ஆர்பாட்டத்திற்கு AIIEA சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர். தண்டபாணி அவர்கள் தலைமை தங்கினார். இன்சூரன்ஸ் பகுதியில் உள்ள முகவர்கள் சங்கம், டெவலப்மென்ட் அதிகாரிகள் சங்கம், ஓய்வூதியர்கள் சங்கம், பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் மத்திய அரசின் தேசவிரோத கொள்கைகளுக்கு எதிராக கண்டன குரல் வலுவாக எழுப்பப்பட்டது.
போராடும் இன்சூரன்ஸ் AIIEAஊழியர்களுக்கு ஆதரவாக, திரளாக அவர்களது  ஆர்பாட்ட பங்கேற்பில் கலந்து கொள்ளுமாறு நமது BSNLEU மத்திய, மாநில சங்கங்களின் அறைகூவலை ஏற்று நமது BSNLEU மாவட்ட சங்கம் அனைத்து கிளைகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.அதனடிப்படையில் நமதுBSNLEU  பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட (16 பெண்கள் உட்பட) தோழர்கள் கலந்துகொண்டு தோழமை பூர்வமான ஆதரவைBSNLEU சார்பாக  நல்கினோம். நமது BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன்AIIEA போராட்டத்திற்கு ஆதரவாக வாழ்த்துரை வழங்கினார்.

No comments: