அருமைத் தோழர்களே ! கடலூர் மாவட்டத்தில் P.V என்று சொன்னால் அரியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லமுடியும்... நமது அரங்கம் மட்டுமல்ல, மாறாக அனைத்து பகுதியிலும் அறிமுகமாகி பொது சேவைகளில், உதவி செய்வதில் எப்போதும் முன் நிற்க கூடிய அன்புத்தோழன் . . . அன்றைய கேசுவல் மஸ்தூர் முதற்கொண்டு, இன்றைய ஒப்பந்த ஊழியர் வரை அனைவரின் அன்பை பெற்ற அற்புதமான தோழர். P.V என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அருமைத்தோழர் P. வெங்கடேசன். ஒரு டெக்கினியசனாக இலாக்கா பணியை துவங்கி இன்று கோட்ட பொறியாளர் வரை அலுவலக பணியில் உயர்ந்துள்ள அருமைத்தோழர் P. வெங்கடேசன், தொழிற் சங்கத்தில் ஜனநாயகத்தை காக்க,K.G.போஸ்அணியை வளர்க்க தனது உயிரையும் பொறுப்படுத்தாது
அராஜக வாதிகளிடம், அடிவாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சை பெற்ற தோழர்.P.V ஆவார். தனது சீரிய பணி மூலமாக தொழிற் சங்கத்தில் படிப்படியாக உயர்ந்து, தற்போது AIBSNLEA தமிழ் மாநில சங்கத்தின் மாநில பொருளாராக இருந்து 31-07-16 அன்று இலாகாவில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரது பணி நிறைவு காலத்தில் எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று குடும்பத்தாருடன் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். ... என்றும் தோழமையுடன், எஸ். சூரியன். D/S-BSNLEU.
No comments:
Post a Comment