Wednesday 16 November 2016

நவம்பர் 16 - உலக சகிப்புத் தன்மை தினம் . . .

Image result for இன்று நவம்பர் 16 - உலக சகிப்புத் தன்மை தினம்இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்துவருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் நிலவும் பல்வேறு மதங்களையும் கலாச்சாரங்களையும் பாராட்டி, அவற்றை சமமாகக் கருதி ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல, மாறாக, உலக நாடுகள் அவரவர் நாட்டின் சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்த வேண்டும்என்று யுனெஸ்கோ வின் அறிக்கையில் சகிப்புத்தன்மையின் இலக்கணம் வரையறுக்கப்பட்டுள்ளது.
மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையாகிலும் நம்மிடை யே இருக்க வேண்டும் என்பதை நவம்பர் 16 நமக்கு நினைவுறுத்துகிறது!

No comments: