Saturday 19 November 2016

18-11-16 CGM(O) போராட்டம் பற்றி பத்திரிக்கையில். . .

நிர்வாக வாக்குறுதியை மீறி 11 ஒப்பந்தத் தொழிலாளர் நீக்கம்,BSNLஊழியர்கள் எதிர்ப்புபோராட்டம்

தமிழ்நாடு BSNL. தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 11 ஒப்பந்தத் தொழிலாளர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கக் கோரியும் ஊழியர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று (நவ. 18) நடைபெற்றது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப 2009ம் ஆண்டு மே மாதம் முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல், பி.எஸ்.என்.எல். கார்ப்பரேட் அலுவலக உத்தரவுப்படி இபிஎப், இஎஸ்ஐ விதிகளை கறாராக அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக் கைகளும் முன்வைக்கப்பட்டன.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் இணைந்து சென்னையில் தலைமை பொது மேலாளர் அலுவலக வாயிலில் இந்த ஆர்ப்பாட் டத்தை நடத்தின.மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாநில தலைவர் எம்.முருகையா, மாநிலச் செயலாளர் சி.வினோத்குமார், ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் .ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஊழியர் சங்க நிர்வாகிகள், ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறையில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு பழைய நிறுவனத்திடம் ஒப்பந்தம் முடிந்தவுடன் புதிய நிறுவனத்திற்கு ஒப் பந்தம் மாறும்.
ஆனால் பழைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் புதிய ஒப்பந்த நிறுவனத்திடம் தொடர்ந்து வேலை செய்து வருவார்கள். இதுதான் பல்லாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.இந்நிலையில் கடந்த செப்டம் பர் மாதம் 30ம் தேதியுடன் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் பெங் களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒப்பந் தம் எடுத்திருந்தது. தொலைத் தொடர்புத் துறை நிர்வாகம், ஊழியர் சங்கத்திடம் அந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருப்பார்கள் என உறுதி அளித் தது.
ஆனால் புதிய ஒப்பந்த நிறுவனம் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா, ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் உள் ளிட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டது என்று செல்லப்பா தெரிவித்தார்.இதுகுறித்து ஊழியர் சங்கம் சார்பில், நிர்வாகத்திற்கு 3 முறை கடிதம் அளித்தும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. உடனடியாக இந்த பிரச்சனைக்கு நிர்வாகம் தீர்வு காணவில்லை என்றால் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் போராட்டம் நடைபெறும் என்றார்.
.

No comments: