Monday 28 November 2016

நவ -28, தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்த நாள.. .

Image result for Friedrich engelsகம்யூனிச சித்தாந்த ஆசான்களில் ஒருவரான பிரடரிக் எங்கெல்ஸ் இன்றுதான் பிறந்தார். நவம்பர் 28, 1820
அவர் கம்யூனிச தத்து வத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர்.அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார்.ஆனாலும் சுயமாக கல்வி பயின்று மேதையானார். மார்க்ஸ் இவரைஇன்னொரு நான்என அழைத்தார்.
மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு மார்க்ஸ் மறைந்து விட்டார். மார்க்ஸ் மறைவுக்கு பிறகு அவரது குறிப்பு நோட்டுகளில் இருந்து மற்ற மூன்று புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட்டார்.அவர் இல்லாவிட்டால் நமக்கு இப்போது இருக்கிற மாதிரி முழுமையான வடிவில் கம்யூனிச தத்துவம் கிடைத்து இருக்காது

No comments: