Sunday 1 September 2013

ரூபாய் மதிப்பு சரிவை இப்படி....


கறை நல்லது தான்!’

“... இன்னும் சொல்லப்போனால் ரூபாய் மதிப்பு சரிவதும் கூட பொருளாதாரத்திற்கு நல்லதுதான். அப்போது தான் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற போட்டி உணர்வு அதிகரிக்கும்.”-நாடே பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிற ரூபாய் மதிப்பு சரிவை இப்படி பதற்றமே இல்லாமல் கையாளும் திறமை பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை விட்டால் வேறு யாருக்கு வாய்க்கும்?உள்நாட்டுத் தொழில்களையெல்லாம் அழித்து, அனைத்தும் இறக்குமதி மயம்; அனைத்தும் அந்நிய மயம் என்று ஆக்கிவிட்டு, ஏற்றுமதியை அதிகரிக்க போட்டி உணர்வை உருவாக்கப் போகிறாராம்.“சகதியில் விழுந்து புரளுங்கள்; கறையாகி விடும் என்று பயப்படுகிறீர்களா? கறை நல்லது தான், அப் போது தானே அதை நன்றாக துவைக்க வேண்டும் என்ற சிந்தனை பிறக்கும்!”“அப்புறம், நீங்கள் சகதியில் விழுந்ததற்கு நாங்களா பொறுப்பு? ரூபாய் மதிப்பு சரிவுக்கு பல உள்நாட்டு, வெளிநாட் டுக் காரணங்கள் இருக்கின்றன. நாங்களா பொறுப்பு?நிலக்கரித்துறையில் ஆவணங்கள் காணாமல் போ னதற்கு நானா பொறுப்பு? வெங்காயம் விலை உயர்ந்ததற்கு நானா பொறுப்பு?”- ஆமாம் ஐயா, நீங்கள் பொறுப்பில்லை.பொறுப்பில் லாதவரை பதவியில் அமர்த்தியதற்கு நாங்கள்தான் பொறுப்பு. பொறுப்பில்லாத உங்களைத் தூக்கி எறிவதற்கும் நாங்கள் தான் பொறுப்பு!
-----தீக்கதிர் 

No comments: