Monday 20 July 2015

ஜூலை-20, தோழர் ஏ.நல்லசிவன் நினைவு நாள்...

 “நல்லசிவன் கட்சியின் மூளை. அவருடைய மண்டையோடு உடைக்கப்பட வேண்டும்’’. தோழர்கள் நல்லசிவன், நல்லகண்ணு, .மாயாண்டிபாரதி, மாணிக்கம், மீனாட்சிநாதன் உள்ளிட்டு 94 பேர் மீதான நெல்லை சதி வழக்கை நடத்திய போலீஸ் அதிகாரி கிருஷ்ணசாமி சொன்ன வார்த்தைகள் இவை. தனது 17 வயதில் சுபாஷ் சந்திர போஸ் மீதும், காங்கிரஸ் மீதும் பிடிப்பு ஏற்பட்டு, 18 வயதில் தேசிய வாலிபர் சங்கத்தில் இணைந்து, காங்கிரஸ் அறிவித்த தனிநபர் சத்தியாகிரக போராட்டங்களில் பங்கேற்று, நேரு கைது செய்யப்பட்டதை எதிர்த்து அம்பை தீர்த்தபதி பள்ளியில் வேலைநிறுத்தம் செய்து, மாணவர்களது பெரும் ஊர்வலத்திலிருந்து தனது அரசியல் நடவடிக்கை யை துவக்கி, காந்திய வழியில் அல்ல, மார்க்சிய வழியில் மாத்திரமே தேசம் முழு விடுதலை அடையமுடியும் என அறிந்து, 1940ல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி 57 ஆண்டுகள் உழைக்கும் வர்க்கத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரும்பணிகள் ஆற்றியதோழர் .நல்லசிவன். அவர்களது போராட்ட வாழ்க்கை இன்றைக்கும் இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
தனது  திருமணத்திற்கு முந்தைய நாளில் பிரம்மதேசம் வந்திருந்த தோழர் வி.பி.சிந்தனை தோழர் .நல்லசிவன் சந்தித்தார். தோழர் வி.பி.சிந்தன் அந்த சந்திப்பு குறித்து கூறுகிறார், “1943 ஜனவரி 27ம் தேதி என்று நினைக்கிறேன். பிரம்மதேசம் என்ற கிராமத்திற்கு அழைத்து சென்றனர். இரவு 7 மணிக்கு ஒரு ஆரம்பப்பள்ளிக்கு போனோம். மாப்பிள்ளை கோலத்தில் ஒருவரை அழைத்து வந்தனர். அந்த இளைஞர் மாப்பிள்ளைக்கான மனோநிலையில் இல்லை. அரசியல், நாட்டு நடப்பு பற்றி நீண்ட நேரம் விவாதித்தோம். அந்த இளைஞரின் பேச்சிலிருந்து அவர் தெளிவான மார்க்சியவாதி என்பது தெரிந்தது. அவரின் இயக்கப் பற்று என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரின் வெள்ளை இதயம் என்னை வியக்க வைத்தது. மறுநாள் அந்த இளைஞரின் திருமணத்திலும் கலந்து கொண்டேன். அந்த இளைஞர்தான் .நல்லசிவன்”. தோழர் .நல்லசிவன் குறித்து தோழர் சுர்ஜித் கட்சியின் ஆங்கில பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் இப்படி எழுதினார், “கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதால் மட்டும் ஒருவர் கம்யூனிஸ்ட்டாக மாறிவிடுவதில்லை. கம்யூனிஸ்ட்டாக விளங்குவது என்பது ஒரு தொடர்ச்சியான போராட்டம்.

No comments: