Sunday 19 July 2015

செப்டம்பர் 2 வேலைநிறுத்தம்-பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பு மாநாடு.

பஞ்சாப் மாநிலத்தில் இயங்கும் அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய-மாநில அரசு ஊழியர் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்மேளனங்கள் இணைந்து சிறப்பு மாநாடு ஒன்றை சனிக்கிழமையன்று ஜலந்தர், தேஷ்பகத் யாத்கர் கூடத்தில் நடத்தின. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.நடைபெறவிருக்கும் செப்டம்பர் 2 அகில இந்திய வேலைநிறுத்தத்தை பஞ்சாப்பிலும் சண்டிகரிலும் மாபெரும் வெற்றிகரமாக்கிட சிறப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய தலைவர்கள் அனைவரும் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் மற்றும் அகாலி-பாஜக தலைமையிலான பஞ்சாப் மாநிலஅரசாங்கம் ஆகியவற்றின் மக்கள் விரோத, ஊழியர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தனர்.
ஐமுகூ அரசாங்கத்தைவிட மிகவும் அரக்கத்தனமான முறையில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை பாஜக மோடி அரசு அமல்படுத்துவதாக அவர்கள் கூறினார்கள். கடந்த ஓராண்டில் அது நிறைவேற்றியுள்ள அனைத்து முடிவுகளுமே கார்ப்பரேட்டுகளுக்கு நலம் பயக்கக்கூடிய விதத்திலும் உழைக்கும் மக்களுக்கு எதிரான விதத்திலுமே இருந்து வந்திருக்கின்றன என்றும் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவந்திருப்பதை ரத்து செய்ய வேண்டும், அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு ஊழியர்கள் போன்று பல்வேறு திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களையும் குறைந்தபட்ச ஊதியத்துடன் நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும், இன்சூரன்ஸ், இராணுவம், ரயில் மற்றும் சில்லரைச் சந்தைஉட்பட கேந்திரமான துறைகளில் அந்நிய நேரடி முதலீடு கூடாது, விவசாயிகள் விரோத நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம் ரத்து, குறைந்தபட்ச ஊதியமா ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி அவர்கள் உரை யாற்றினார்கள்

No comments: